சிந்து தேசத்திய வாக்படாச் சாரியாரால் இயற்றப்பட்ட ஓர் ஆயுள் வேத நூல். இது சரகம் சுசுருதத்தினின்று தொகுக்கப்பட்டது. இதில் அங்காதி பாத விவரம், வைத்திய பாகம், சத்திரம் செய்யும் முறை, கண்ணோய், மருத்துவம், சுகாதாரம் முதலியவைகளைப் பற்றிக் கூறும். இதன் முறைகள் சிறந்தவைகளாகக் கருதி மலையாளத்தில் கையாளப்பட்டு வருகிறது. இது ஓர் காரணப் பெயர். எட்டு அங்கங்களில் இருதயம் எப்படிச் சிறந்ததோ அவ்விதமாய் வைத்தியத்திற்கு இது சிறந்தது - A work on Ayurveda written by Vakbhatachary, a native of Sindh in Western India. It deals in Anatomy, Medicine, Surgery, Ophthalmology, Midwifery and Hygiene.
Note: Literally the term means the heart of eight sections in Ayurveda. It is in high repute amongst the Malayalee Veidyans in the South.