Search Keyword in GENERAL category
அபசுமார ரோகம்
[ Abasumaararogam]
- a. பித்தம் அதிகரித்து உடல் முழுவதும் பரவுவதால் நரம்பைப் பற்றிக்கொண்டு புத்தியைக் கலக்கும் ஓர் நோய். இதனால் பிரக்கினையற்று, மயங்கி, பூர்வ விஷயங்கள் மறந்து, விழி, மூக்கு, உதடு, புருவம், முதலியவைகள் சேர்ந்திறுகி, வலி உண்டாகி, வாயில் வெண்ணுரை தள்ளி, மேற்சுவாசம் காணும். அன்றியும், கண்களில் இருள் கம்மியது போல் தோற்றத்தை உண்டாக்கி, விகாரமாய் உருட்டி முழிக்கச் செய்து கை கால்களை உதைத்துக் கொள்ளல் முதலிய குணங்களையும் காட்டும், இது தான் தமிழில் காக்கை வலி எனப்படும். இது சாதாரணமாய்ச் சதா சிந்தனை, துக்கம், பயம் இவைகளாலும், உடம்பிற்கு ஒவ்வாப் பண்டங்களைப் புசித்தல், இயற்கையான வேகத்தை அடக்குதல், மாதவிடாய் காலத்தில் பெண்களைப் புணருதல், இடைவிடாச் சிற்றின்ப நுகர்ச்சி, உடம்பை அடுத்த தோஷங்கள் முதலியவைகளால் ஏற்படும்.
b. A nervous affection arising from the deranged condition of bile in the system. It directly affects the mind. It is characterised by sudden loss of consciousness and transient loss of intelligence and the faculty of past recognitions. The other symptoms are; - eyes, nose, lips and eye-brows are held fast, pain is felt in the muscles, froth issues from the mouth, with hazy appearance to the eyes that are fixed and staring, followed by a succession of titanic convulsions of the limbs etc. – Epilepsy. It is due to mental strain such as, constant thinking, worry or grief, fright etc. It is also caused from extraneous circumstances such as, partaking of uncongenial articles of food and violation of regimen of conduct, repression of any natural urging of the body, intercourse with a woman in her menses, indulgence in amorous fancies etc. leading to an aggravation of the bodily humours tending to attack the brain directly. It is a disease of idiopathic origin.
a. See காக்கை வலி.