யுனானி வைத்தியத்தில் வழங்கும் ஓர் கடைச் சரக்கு, இது ஓர் வகைக் கொடி, இதன் கிளைகள் மெல்லிய கயிறுகளைப் போலும், அல்லது நூல்களைப் போலுமிருக்கும். மரங்களிலும், அவைகளின் பக்கங்களிலும் படரும். மிகக் கோடையிலும் காயாது, இது உலராததற்கு முன் சிகப்பாகவும், உலர்ந்தால் மஞ்சளாகவும் இருக்கும். கசப்பும் வாசனையுமுள்ளது. இது உடம்பின் தோஷத்தைக் கபம், பேதி, முதலியவைகளால் வெளிப்படுத்தும். நரம்பு வலி, ஒற்றைத் தலைவலி, இசிவு, காக்கை வலி, வீண் கவலை, பைத்தியம், முகவாதம், கீல் வாயு, பிளவை முதலியவைகளுக்கும் கருங் குட்டம், வெண் குட்டம், படை, பெருநோய் முதலிய சரும நோய்களுக்கும் இதை உபயோகிக்கலாம் - A bazaar drug used in the Unani system. It is a kind of creeper resembling a rope or a string and creeping over plants or on their sides. It never dries up even in the summer. It is red when afresh and yellow when dried, bitter and fragrant. It removes impurities from the system through phlegm and purgation. It is a very useful remedy in cases of nervous affections, hemicranias, spasms, epileptic fits, undue agitation of the mind, lunacy, facial paralysis hemiplegia, rheumatism, cancer, carbuncle etc. It is also used with great advantage in black and white leprosy, eczema, leprosy attended with mutilation of fingers or toes, and other skin affections.