Search Keyword in SYMPTOMS category
அடிவயிற்றுவலி
[ Adivayittruvali]
- a. கீழ் வயிற்றில் காணும் ஓர் வலி.
b. Abdominal pain in general.
a. பெருங்குடலிற் காணும் ஓர் வலி.
b. Pain pertaining to the colon – Colic.
a. பித்தக் கோளாறினால் ஏற்படும் வலி, இதனால் பித்த வாந்தி, பித்த பேதி முதலியன உண்டாகும்.
b. Abdominal pain, vomiting of bile and the passage of bilious stools etc. arising from bilious disorders. Bilious colic.
a. குடலிற் காணும் ஓர் கொடிய வலி.
b. An acute abdominal pain in the intestines – Intestinal colic.
a. சூதகக் கோளாறினால் பெண்களுக்கு அடிவயிற்றில் காணும் ஓர் கொடிய வலி.
b. A severe abdominal pain in women at the menstrual period Menstrual colic.
NOTE: சாதாரணமாய் இவ்வலி மற்றும் அநேக காரணங்களை முன்னிட்டு ஏற்படக் கூடும் - உ-ம். Generally, this abdominal pain may be due to various other causes e.g.
i. பித்தக் கற்கள், பித்தத் தாரையை அடைத்துக் கொள்வதனால் உண்டாகும் வலி, abdominal pain to the gall-stones passing along or obstructing the bile-duct – Biliary or hepatic colic.
ii. அளவு கடந்து புசிப்பதினால் ஏற்படும் வலி, pain due to excess in eating and drinking – Crapulent colic.
iii. செரியாமையினால் உண்டாகும் வலி, pain in the intestines due to indigestion – Saburral colic.
iv. மலம் தடைப்பட்டு வாயு அதிகமாகக் குடலிற் சேருவதினால் உண்டாகும் வலி, intestinal colic due to accumulation of feces - Stercoral colic.
v. கருப்பைக் கோளாறினால் அடிவயிற்றில் உண்டாகும் வலி, severe abdominal pain due to uterine disease or diseases – Uterine colic.
vi. குடலில் வாயு சேருவதால் ஏற்படும் வலி, pain in the bowels due to their distension with gas – Intestinal colic.