Search Keyword in TAMIL WORD category
- a. இதுதான் நவாச்சார வாயு, கந்தக வாசனை கலந்ததாய்க் கேட்ட நாற்றத்தை வீசும் ஓர் காற்று, செடிகள், அழுகுவதனாலும், பிராணிகள் இறந்து அவைகளின் உடல்கள் அழுகுவதனாலும், சாக்காடைக் கால்வாய்களிலிருந்தும் இக் காற்று உற்பத்தியாகும். இது மனிதருக்குத் தீங்கை விளைவிக்கும். குதிரை லாயம், மாட்டுத் தொழுவம், சுடுகாடு, நீவிச்சாலை, நாருரிக்குஞ்சாலை, தோற் கிடங்கு முதலிய இடங்களில் இவ்வாயு வியாபித் திருக்கும்.
b. Sulphuretted hydrogen or hydrogen sulphide or hydro sulphuric acid H2S. It is gas having an offensive odor of sulphur formed by the decay of plants, and decomposition of dead animal bodies. The gas exists abundantly in drains and gutters and does great harm to people who are near it and who inhale it. It is also very common in places like the cattle sheds, stables, burial grounds, Indigo or jute factories tanneries etc.