Search Keyword in ANIMAL category
- a. அகழ் எலி - வரப்பு எலி- வயல் எலிகளுக்குள் இது ஓரு பெரிய சாதி. இதன் மயிர் நீளமாயும் சிறிது முறப்பாயும் கபில நிறம் வாய்ந்தும் இருக்கும். சிறு மயிர்கள் மிருதுவாயும் புகை நிறம் வாயுந்ததாயும் இருக்கும். வயிற்றின் பாகத்தில் மயிர் வெளுப்பும் சாம்பல் நிறமுங் கலந்ததாக இருக்கும். முழு நிறமோ சாதாரண எலியின் நிறத்தைப் போலிருக்கும். தலை சிறியது, காதும் சிறியது. சிறுமயிர்கள் அடர்ந்து காணும். வால் உடம்பின் நீளம் உண்டு. மீசை நீளம் அடர்த்தி, பற்கள் மஞ்சளாய் இருக்கும். குளம் தோண்டும் ஒட்டர்கள் இதை பிடித்து உண்பார்கள். இது வலைக்குள் சேகரித்து வைத்திருக்கும் நெற்கதிர்களைத் தோண்டி எடுத்துத் தங்களுக்கு மழைக்காலத்தில் உதவும்படிக்குக் கொண்டு போவார்கள்.
b. Mole-rat-Nesokia indica alias Arvicola indica alias Musdubius. Its fur is rough long and somewhat brown, the short furs softer but dusky, paler beneath and tinged grey. The colour is like that of the common rat, head short, ears small, and tail naked and nearly as long as the body, ears small and covered with fine small hair, whiskers long and full and incisors orange yellow. Tank diggers or wodders as they are called, capture this animal in great numbers and used them as food, they plunder the graia stored up in the holes and take it home for use in winter.