Search Keyword in TAMIL WORD category
அக்கிரமப் புணர்ச்சி
[ Akkiramappunarchi]
- a. (அக்கிரமம் = 1. ஒழுங்கின்மை, 2. முறைமைக்கேடு, 3. அநீதம், 4. கொடுமை).
a. ஒழுங்கீனப்புணர்ச்சி, அதாவது - சுகாதார விதிக்கு விரோதமாக மாதவிடாய்ப் பெண், கர்ப்பினி, நோயாளி அல்லது பத்தியமாக விருக்கும் பெண் ஆகிய இவர்களைப் புணருதல்.
b. (In medicine) Irregular sexual intercourse with a woman during her menstrual period or pregnancy or during her illness or dietetic treatment, contrary to all rules of hygiene.
a. முறை கேடான புணர்ச்சி, அதாவது - தரும சாஸ்திரத்திற்கு விரோதமாகக் கைம்பெண், பொதுமகள், வேற்றுப் பெண், முதலியவர்களையும், முறைமைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறாகத் தாயார், உடன் பிறந்தாள், மூத்தவள், குரு பத்தினி முதலானவர்களைச் சோரத்தனமாய் புணருதல்.
b. (In Moral philosophy) Illicit intercourse or in other words clandestine sexual connection with a widow, a virgin, a prostitute or other women, with whom sexual intercourse in prohibited because of their relationship such as mother, sister, elderly women, Guru’s wife and so on, against all principles of morality and the established rules and customs of society.
a. அநீதப் புணர்ச்சி - அதாவது சட்டத்திற்கு விரோதமாக அயலான் மனைவி, பருவமடையாப் பெண், இசையாப் பெண் முதலியவர்களையும், பிரக்கினையற்ற அல்லது உயிர் துறந்த பெண்களையும் வலியப் புணர்தல்.
b. (in law) Illegal intercourse i.e., copulation with a married woman amounting to adultery under section 497 I.P.C. or with a woman forcibly against her will and without her consent or with a girl under 12 years of age amounting to rape under section 375 I.P.C. or with a woman who is dead or unconscious.
a. கொடும் புணர்ச்சி, அதாவது இயற்கைக்கு விரோதமாக எம்மனிதனுடனாவது பெண்ணினிடமாவது ஆசனப் புணர்ச்சி செய்தல், அல்லது கீழ் வகைப் பிராணிகளுடன் சம்போகம் செய்தல்.
b. Unnatural offence like anal coitus and carnal intercourse against the order of nature with any man or woman amounting to Sodomy or an unnatural connection of man or a woman with the lower order of animals amounting to Bestiality as a means of sexual satisfaction under section 377 I.P.C.
a. அதீதப்புணர்ச்சி, அதாவது அறியாத் தனத்தினால் நினைத்த போதெல்லாம் வரம்பு கடந்து புணர்தல்.
b. Indiscriminate sexual intercourse – Pantogamy. See also அசுபாவப் புணர்ச்சி.