இது இராத்திரியில் பூர்ப்பதால் இப்பெயர். இதற்கு ஆம்பல் என்றும் அல்லித்தாமரை என்றும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. இது நீர்ப் பாங்குள்ள குளம், குட்டை, வாய்க்கால், நீரோடை முதலியவிடங்களில் தண்ணீரின் மேல் முளைத்திருக்கும். இதன் வேர்த் தண்டு, சிறிய வேர்களை மண்ணில் படியும்படி விடும். வட்டமான இலைகளும், பூக்களும் தண்ணீரின் மேல் மிதக்கும். இது பீனிசம், மலபந்தம், உடம்புச் சூடு, இவைகளைப் போக்கும். இருதயம், மூளை இவைகளைப் பலப்படுத்தும். இது அடியிற் கண்டபடி பல வகைப்படும். ஆயினும் பொதுவாக அல்லியெனின் வெள்ளல்லியையே குறிக்கும். - It is so called from its flowering at night and it is otherwise called Aumbal; Lily lotus genus – Nymphae edulis. It is water – plant found in lakes, ponds, canals, rivers etc. The fleshy or tuberous root-stock will be sending down rootles into mud and the leaves are usually circular; the flowers are large and expanded, and will be seen floating on water. It is used for curing constipation, catarrh of the nose and bodily heat. It also strengthens the brain and cools the heat in the system. The following are the different varieties, but the word அல்லி generally applies to white water-lily.
1. வெள்ளல்லி, white Indian water-lily – Nymphare lotus (pubescenes)
2. சிகப்பல்லி, red Indian water-lily – Nymphae rubra alias nymphae edulis.
3. செவ்வல்லி - சிகப்பல்லி.
4. நீலவல்லி, Blue Indian water lily – Numphae stellate.
5. சிற்றல்லி, star water-lily – Nymphase cyanea.
6. செங்கழுநீர், purple Indian water – lily – Nymphae odorata.
7. வெள்ளாம்பல் அல்லது நெய்தல், white Indian water-lily – Nymphae lotus alias Custalia pubescens.
Note: 1. Compare also the other varieties such as:-
Crinum asiaticum keel-leaved african lily, poison lily, polianthes tuberosa, Fourcroya gigantea, giant Mexican lily, Methonica superba, Malabar glory lily, superb lily, flax lily, and tuberose white lily.
Note: 2 In tamil கொட்டி ஆம்பல் and நெய்தல், are differently classified which is evident from the following stanza:-
“கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.”
But they are all named in English by a common term viz. Indian water – lily and classified under the same Botanical group viz. Nymphaeaceae.