கற்கோவை.
அப்பைக் கோவை ஓர் வகைக் கோவைக்கொடி, இது படற்கொடி, இதன் அடித்தண்டு நுண்ணியதாகவும், மொசுமொசுப்பாகவும், இலைகள் இருதய வடிவமாகவும் நீண்ட காம்புகளுடன் கூடியும், காய் ஒன்றுக்கு 2-6 விதைகளுள்ளதாகவும் இருக்கும். விதைகள் கருப்பாயும் தட்டையாயுமிருக்கும். பூக்கள் இரண்டு ஒன்று சேர்ந்தும் இருக்கும். இதன் சூரணம் அழற்சியைப் போக்கிச் சாந்தப்படுத்தும். இது தரங்கம் பாடியில் விசேஷம். இதன் இலை தட்சணத்தில் கீரையாக உபயோகப்படும். - A kind of creeper. Saffron Indian caper - Rhyn chocarpa foetida alias Acchmandra rost rate. It is a spreading plant. The stem is slender and hairy. The leaves with long peduncles are heart shaped. The legume has 2-6 seeds and they are dark and flat. The seed is compressed and the flowers are usually to together. The powder of the seed is medicinally demulcent. It is common in Tranquebar. The leaves are used in Deccan as a vegetable green to make