Search Keyword in TREE category
- a. இது வெகு சுலபமாய் அழிந்து விடக் கூடியதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இம்மரம் பார்வைக்கு வெகு அழகாக இருக்கும். இது தென்னிந்தியக் காடுகளில் அதிகமாயும், தோப்புத் துறவு, கால்வாய் முதலிய இடங்களில் அபூர்வமாயும் சொற்பமாயும் பயிராகும்.
மலையாளம், குறநாடு, ஆசாம் (Assam),முதலிய இடங்களிலும், மற்றும் பாறை நிலங்களிலும் இது முக்கியமாய் விளையும். கடைகளிற் கிடைக்காது. இதன் கிளைகளின் இலைகள் 3 முதல் 5 அங்குல நீளம் வரைக்கும் கூட வளர்ந்திருக்கும். அவை மாறி மாறிக் குறுகலாயும், நீளமாயும், கிளைகள் மீது பட்டைகள் வாய்ந்தும், பூக்கள் தனித்தும் சேர்ந்தும், இலைக் காம்புகளின் பக்கங்களிலும் இருக்கும். அன்றியும், அவை வெளிர் மஞ்சளாயும், வாசனை உள்ளதாயும் இருக்கும். சித்திரை வைகாசி மாதங்களில் பூக்கும். காய்கள் ஒரே விதையுள்ளன. பூவந்திக் கொட்டை அல்லது கொட்டைப் பாக்களவு உள்ளதாகவும் சிவப்பாகவும் கொஞ்சம் தித்திப்பாகவும் இருக்கும். விதை கபில நிறம் வாய்ந்திருக்கும். இதன் பழத்துள்ளே கொட்டையும் சதைப்பற்று நுங்கு மாதிரியும் இருக்கும். உருசிக்கத் துவர்ப்பாயிருக்கும்.
இதை ஏழைச் சனங்கள் தின்பார்கள். பார்வைக்குப் பழுத்த களாக்காய் அல்லது நாகப்பழத்தைப் போலிருக்கும்.
இதுதான் ஏறழிஞ்சில். இதற்கு அங்கோலம் எனவும் பெயர். இலை சீதாச் செடியின் இலையைப் போலவும், செடி பார்வைக்குச் சணல் செடியைப் போலவும் இருக்கும். இதன் கசப்பான வேர்ப்பட்டையைச் சூரணித்து மேக நோய், சரும நோய், நீர்க்கோர்வை, குட்டம் முதலியவைகளுக்கு உபயோகிக்கலாம். இதன் வேரின் சாறு கிருமி நாசினி, விரேசனி; இது குமட்டலுடைதாயினும், உடம்பிற்குப் பலத்தைத் தரும். பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக்கும் உபயோகிக்கலாம். பாண்டு நோய்க்கும் கொடுக்கலாம். இலைகளை எண்ணெயிற் கலந்து காய்ச்சிப் பூச விரணத்தை ஆற்றும். இதன் புல்லுருவியினாற்ல் பைத்தியம் பிடிக்கும்.
b. It is so called from its being liable to destruction very soon. Title otherwise is Ancola-fruit plant; Hill sack tree; Red-wood; Sage-leaved Alangium; stone mango – Alangium Lamarckii alias A.acuminatum alias A.delapitalum.
The tree has an ornamental appearance. It is very common in the forests of South India and is rarely found grown in gardens, canals, ponds etc. It is abundantly grown in Malabar, Kornad (Coromandal coast) Assam etc. and also in other rocky places.
Leaves from 3’ to 5’ long and from 1 to 1½ inches broad, alternate; they are narrow and oblong shaped; braches have bark and the filaments are hairy at the base. The flowers are solitary or aggregate in the axils of the leaves. They are whitish yellow and fragrant. The tree flowers in April-May. The fruit has only one seed and it resembles the soap-nut or the area-nut in size and it is red in colour and is eatable, though somewhat astringent. It is eaten by the poor. It looks like a ripe Bengal currant or a jambo fruit.
This is also called ‘Eralinjil’ or Ancola fruit plant. The leaves resemble those of the custard-apple tree and the shrub that of the hemp plant. The root-bark which is very bitter, is pulverised and is used for venereal complaints, cutaneous affections, cold, leprosy etc, and it appears to be valuable in this respect. It is medicinally an emetic, nauseant, alterative, tonic and antiphyretic. It is also an antidote to snake-bites and a remedy for bites of mad-dogs. It is also used in dropsy. The leaves boiled in oil are used and a vulnerary ointment. The parasite of this tree will bring about madness and it is invariably used in black magic. The root is a laxative and is useful in worms, colic inflammations and poisonous bites. The nutritive fruit is said to be cooling, a tonic, and a useful article in consumption and haemorrhage.