Search Keyword in TREE category
- a. அரச மரம், இது வடமொழியில் ‘போதித துருவம்’ எனவும், தமிழில் மரங்களுள் அரசனெனவும் வழங்கும். இது ஒரு பெரிய மரம். தெய்வீகத் தன்மையுள்ளதால் கோயில், குளம், ஆற்றங்கரை, சத்திரம் முதலியவிடங்களில் இதைப் பார்க்கலாம். இதன் கிளைகளில் விஷ்ணு பிறந்தாரென்றும், புத்தர் கயை ஷேத்திரத்தில் இதனடியிலுட்கார்ந்து ஞானத்தைப் பெற்ற காரணம் பற்றி இதற்குப் போதிமரம் என்ற பெயர் வந்ததென்றும் சொல்வதுண்டு. வட வாக்கினி குதிரை ரூபமாய் இதனுள் வசிப்பதால் இதற்கு அசுவத்தமென்றும் பெயர் ஏற்பட்டதெனவும் கூறுவார். இதன் விதை குளிர்ச்சியைத் தருவதால் அதை லேகியத்திலும், சூரணத்திலும் சேர்த்துக் கொடுப்பதுண்டு. இதை சொறி, சிரங்கு, விக்கல் முதலியவைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்கப்படும். இதன் கனி, சீரண சக்தியைத் தருவதுடன் மலத்தையும் இளக்கும் குணமும் வாய்ந்தது. இதன் பட்டையின் குழம்பு வீக்கத்தை வாங்கும், இதன் சாம்பலைத் தண்ணீரில் ஊறவைத்துத் தெளிந்தவுடன் கொடுக்க விக்கலை நிறுத்தும் அடியிற் கண்டபடி இச்சாதியில் பல வகைகளுண்டு.
b. It is called in Sanskrit ‘the Bodhidruma’ (knowledge tree) and in Tamil it is termed “the king of trees”. The other names of this tree are: – Holy fig tree, Peepul tree or Wisdom tree – Ficus religiosa. It is a large tree held very sacred and is generally met with near temple, tanks, banks of rivers, ghauts, choultriea and other public places. Vishnu is said to have born among its branched and hence it is called the ‘Vishnu tree’. Buddha was seated under this tree a Gaya in Bihar, when he had enlightement. Hence it is called the ‘Bodhi tree’. It is said that the great Fire (வடவாக்கினி), resides in this tree as a horse and therefore it is called Asvatham. (Asvam = a horse). It has tapering leaves. Medicinally, its seed is cooling to the system and it is also an alterative. It is therefore prescribed in electuary and in medicinal powders. The leaves and young shoots are good purgatives, an infusion of the bark is given internally in scabies. The ripe fruit is a laxative. A paste of powdered bark is an absorbent in inflammatory swellings. The ashes of the bark dissolved in water and filtered, is a good remedy in cases of hiccough. The different varieties of this genus are:-
S.No
Tamil
English
1.
கொடியரசு
Short tailed peepul – Ficus Arnottiana.
2.
புண்ணியலரசு
Sacred fig - same as Ficus religiosa.
3.
பூவரசு
Flowering peepul portia tree - Same as Thespesia populnea
4.
கல்லரசு
Wild peepul –Urostigma arnottianum.
5.
மலையரசு
Hill peepul – Ficus vagans.
a. பூவரசு மரம். இது மஞ்சட் பூக்களை உடையவோர் பெரிய மரம். இதன் பட்டை உடம்பிற்கு வலுவை உண்டாக்கும். பட்டைக்கஷாயம் புண்களைக் கழுவ உதவும். இதை உள்ளுக்குக் கொடுக்கச் சொறி சிரங்கு முதலிய சரும நோய்கள் தீரும்.
b. The flowering peepul - Thespesia populnea or Hibiscus popul noides. It is a large tree with yellow flowers. The bark is medically a mild astringent tonic. The decoction of the bark is used externally as a wash for the parts affected with scabies.
For full particulars see under பூவரசு.