Search Keyword in TREE category
- a. அகிற்கட்டை; பஞ்ச விரைகளில் ஒன்று. இது அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என நான்கு வகைப்படும். இது தான் கள்ளி மரத்தின் உட்பாகத்தில் இருக்கும் வாசனைக் கட்டை, இதை அகருக்கட்டை எனக் கொள்ளப்பொருந்தாது. வாசனையில் ஒன்றாயிருந்தாலும் இது வேறினம். இது மரத்தின் நடுவிலும் அடிப்பாகத்தில் உண்டாகும் வேறுபாட்டினால் இவ்வாசனையைக் கொடுக்கும். இது சாதாரணமாய் மஞ்சளாக இருந்தாலும் இதில் நான்கு வகை நிறங்கள் உண்டு. இது மிகவும் விலை உயர்ந்தது மல்லாமல் மருந்திற்குச் சிறந்ததாகவுங் கருதப்படும். இது கோவிலில் நறும்புகை இடவும் சுடுகாட்டில் பிணத்தைச் சுடவும் உபயோகப்படும். இக்கட்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி கஷாயமிட்டுக் கொடுக்கச் சுரமும், சன்னியும் தீரும், இதைக் கடைகளில் நிறுத்து விற்பார்கள். இதிலிருந்து மணி மாலை செய்து பூசைக்கு உபயோகிப்பார்கள். தற்காலத்தில் இது கிடைப்பது அரிது, ஆசாம், மலாயநாடு, இமயமலை முதலிய இடங்களிலுள்ள மலைச்சாரல்களில் அகப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
b. A fragrant wood known as Agil-wood or Indian scented wood- one of the five aromatics. It consists of four varieties – white, red, yellow, and black. The correct botanical name it is not known. It is the aromatic wood which is formed inside the Kalli tree (Euphorbia genus). It should not be confounded with Agaru (eagle wood). Although the fragrance may be nearly the same, they belong to different botanical groups. The interior part, or trunk possesses or absorbs aroma from the oleaginous Particles stagnating there & concentrating as the result of diseased action. Although the wood is usually yellowish in colour, it generally consists of 4 distinct colours.
The wood is very costly and is useful in medicine. The resinous extract is burnt in temples and the wood is broken into chips and used in decoction in fever and delirium. It is sold by weight in bazaars. It is also used for making rosary beads. It is rarely to be found now, but is said to be available on the mountainous tracts of Assam, Shylet, Malaya, and the Himalayas.
NOTE: There is much confusion about this name as could be evinced from the several hundred names in colloquial use with different termications and this is quite evident from Lushington’s Vernacular list of Plants, wherein it will be found that.
1. அகல், அகில், அகிலை, அகிலிமீனா, all these refer to one and the same plant Chittagoug-wood – Chukrussia tabularis.
2. அகணி, அகணியகில், அகுணி, அகுணியகில், all these refer to White Cedar – Dysoxylum binecteriferum.
3. அகில், Iron – wood – Hopea parviflora of Malabar.
4. அகில், agilwood – Hemicylia porter.
5. அகில், அயில், Cedrela Toona, which in Malayalam is known as Agil and in Canarese, Davadaru.
6. அகில், தில்லைமரம், - Blinding-tree, Tiger’s milk spurge – Excoecaria agallocha alias E.Crenulate.
7. அகில், அகரு, ஓர் வாசனை மரம், Aquila or Eagle-wood - Aquilaria agalocha.