Search Keyword in HERB category
- a. பூசைக்கு உகந்த புல்.
b. A species of sacred grass; Harialli grass – Agrostis linearis.
a. அறுகு - அறுகம் புல் – நோய்களை அறுப்பதனால் இப்பெயர். இது முயலுக்கு உணவாகும். ஆதலினிதற்கு முயற்புல் எனவும் ஓர் பெயர் வழங்கும். இது 6 முதல் 12 அங்குலம் வரைக்கும் வளரும். மிருதுவாயும்,சிறிய இலைகள் கூடியதாயும், பலத்தைக் கொடுக்கக் கூடியதாயுமிருக்கும். எல்லாவிதப் பயிர்களிலும் இதைப் பார்க்கலாம். இது வினாயகருக்கு உரித்தான ஓர் பத்திரம்.
இதன் சாறு போஷிக்கக் கூடியதும், இரத்தக் கழிச்சலைப் போக்கக் கூடியதுமான சக்திகள் வாய்ந்தது. இதன் வேரையும், தளிரையும் சுரத்திற்குக் கஷாயம் போட்டுக் கொடுப்பதுண்டு, இதன் வேரை மிளகுடன் சேர்த்துக் காய்ச்சி மூதண்டக் கஷாயமாகக் கொள்ளலாம். இதனின்று காய்ச்சி எடுக்குந் தைலத்தை மேலுக்கு உபயோகிக்கலாம். இது பலவகைப்படும்.
b. Bent grass; Couch grass; Panic grass – Cynodon dactylon. It is so called from its curing virtue. It is also called ‘The hare grass’ since it forms a food for the hares. It is generally from 6 to 12 inches high and is also smooth; the leaves are small and very nutritious.
It spreads and constitutes roughly ¾ of the pasture lands and is sacred to God Ganesa. The juice of the grass is very nutritious and is a remedy for dysentery. The decoction of the roots and the young leaves is taken internally for fever and the decoction mixed with pepper is an antiseptic against poisons caused by drugs. The oil extracted from the roots is used as an external application.
Note: The different kinds of that plant are:-
1. சிற்றறுகு – Agrostis linearis.
2. புல்லறுகு the same as அறுகு.
3. போறுகு அல்லது பாளையறுகு – Panicum Ischoemoides.
4. உப்பறுகு – Agrostis trenula.
5. கூந்தலறுகு – Agrostis.
6. வெள்ளறுகு – Exacum hyssoppifolium.
7. ஆற்றறுகு – River Variety.
8. யானை அறுகு – Elephant grass.
9. கொடி அறுகு – Creeper grass.
The other common species are: - Gracilis and Virgatus.