Search Keyword in HERB category
- a. நீலிப் பூடு, இதற்கு வடமொழியில் ‘வச்சிரநீலி’ என்ற பெயர். இது 2 அல்லது 3 அடி உயரம் வளரும். பூக்கள் சிறியவைகளாகவும், வாசனை அற்றவைகளாகவும், பச்சையும், சிவப்புங் கலந்த நிறமுள்ளவைகளாகவும் இருக்கும். இது நமது இராஜதானியில் சாதாரணமாய்க் கிடக்கும். இது 1660 காலத்தில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகி அவ்விடங்களில் விளையும் நீலிச் சரக்குகளுக்கு விரோதமாகக் கொள்ளப்பட்டது.
இதன் வேரை நமது நாட்டு வைத்தியர்கள் இரசத்திற்கும், விஷத்திற்கும், முறிவாகக் கொடுப்பார்கள். இது அடியிற் கண்டபடிப் பலவகைப்படும்.
இதன் இலையைப் பக்க சூலைக்கும், சாற்றைத் தேனுடன் கலந்து குழந்தைகளது வாய் விரணத்திற்குங் கொடுப்பதுண்டு. நீலி மருந்தை உடம்பின் வீக்கத்திற்குப் பொடி மருந்தாக உபயோகிக்கலாம். தவிர, வயிற்று வலி, மூர்ச்சை, காக்கை வலி, அக்கினி விசர்ப்பி, முதலிய ரோகங்களுக்கும், நாற்றப் புண்களுக்குத் தூவித் கழுவவும் உபயோகப்படுத்தலாம்.
b. Dog-bite shrub; dyers indigo-Indigofera tinctoria alias I.emarginate. In Sanskrit it is called ‘Vajra neeli’. It is a shrub 2 to 3 ft. high and the flowers are small, scentless and of a greenish rosy colour.
It is very common in this Presidency and it is also called the ‘devils’ eye on account of its inference in British indigo. It was imported into Europe in 1660.
The root of the plant is reckoned by Veidyans as an antidote for mercurial and other mineral poisons; the leaf is considered and alternative and is prescribed in Pakka sulai (பக்க சூலை) or hepatitis. The juice of the young branches mixed with honey is used for aphthae of the mouth in children. Manufactured indigo itself is applied to reduce the swellings of the body and pounded indigo is employed in colic, swoon, epilepsy and erysipelas. It is also sprinkled on foul ulcers to cleanse them.
1. விச்சிர நீலி – கருப்பு நிறமான நீலி, black Aviry.
2. நீலி அவுரி – நாட்டவுரி, Common Indigo – Indigofera tinctoria.
3. இரும்பு முறி அவுரி – வெண்மையும் நீலமும் கலந்த அவுரி, Arabian Indigo – Indigofera argentia.
4. மேனாட்டவுரி – அமெரிக்கா தேசத்திய அவுரி, Indigo from Brazil and Mexico – Babtisia tinctoria.
5. மணில்லா அவுரி – மணில்லா நீலம், Manilla Indigo – Anona reticulata.
6. பெரு அவுரி – ஓரினம், a large variety of the plant.
7. கள்ளவுரி – நீலப்பூ அவுரி, Bastard Indigo – Amorpha fruticose.
8. சீமை யவுரி – ஆங்கிலேய தேசத்து அவுரி, British Indigo – Isatis tinctoria.
9. சீன அவுரி – சீன தேசத்து அவுரி, China Indigo – Isatis indigotica
10. காட்டவுரி – மஞ்சட் பு அவுரி, False Indigo – Baptisia tinctoria.
11. சீமை நீலி – ஓரினம், West Indian Indigo – Indigofera anil.