Search Keyword in HERB category
- a. அவரைக் கொடி, இதைச் சாதாரணமாய் நமது தேசத்தில் எல்லாத் தோட்டங்களிலும் கொல்லை, வயற்காடு, படுகை முதலான இடங்களிலும் பார்க்கலாம். இதைப்பற்றி விவரமாக எழுத வேண்டியதில்லை. இதன் காய் கறிக்குதவும். பத்தியக் கறியாகவும் கொள்ளலாம். இது அடியிற் கண்டபடி பொதுப்பெயராக மொச்சை முதலிய செடிகளைக் குறித்தாலும், அவரைக் கொடிக்குச் சிறப்புப் பெயராகக் கொள்ளப்படும்.
b. Country bean creeper – Dolichos albus. It is a garden variety found in all the gardens of our country, fields, backyards, river-banks, tank-beds etc. it is a well-known plant and so further description of it is unnecessary. It is used in curries and Veidyans prescribe it in invalid’s diet. Although it is used to denote several varieties of this group as mentioned below, it always refers particularly to the Avarai creeper. The different varieties are:-
1. கோழி அவரை, cock-bean – Canavalia obtusitolia.
2. சப்பரத்தவரை, shed-bean – Cyamopsis psorolioides.
3. கொத்தவரை, cluster-bean – Cyamopsis psorolioides.
4. சீனியவரை, china-bean – Cyamopsis psorolioides.
5. காட்டவரை, Jungle-bean – Glycina javanica.
6. பூனைக்கா அவரை, cat-footed bean – Dolichos pruriens.
7. சீமை அவரை, foreign bean – Phascolu strilobus.
8. முருங்கவரை, curling bean – Psophocarpus tetrugonoloubs.
9. வாளவரை, sword-bean – Vigna catiang.
10. பேயவரை, horse – bean – Canavalia ensiformis.
11. ஆட்டுக் கொம்பவரை, another variety of bean resembling the sheep’s horn.
12. வெள்ளவரை, white bean – Dolichos lablab.
Note: Though the above varieties end in the same terminations they are different botanical groups.