Search Keyword in HERB category
அம்மாம் பச்சரிசி
[ Ammaampachcharisi]
- a. அம்மான் பச்சரிசி - பூமியில் தரையோடு தரையாய்ப் படர்ந்திருக்கும் ஓர் பச்சிலை. இதைக் கிள்ளினால் பால் வரும். கசகசாவைப் போல் சிறு சிறு பச்சை விதைகள் நெருங்கக் காய்த்திருக்கும். சாதாரணமாக இப்பூடு, கொல்லை, குப்பைமேடு, தோட்டம், வயற்காடு, சாக்கடையோரம், முதலான இடங்களில் வளர்ந்திருக்கும். இது பெருஞ்சாதி, சிவப்பு ஜாதி, சிறியது என மூன்று வகைப்படும். இதற்குச் ‘சித்திர வல்லாதி’ அல்லது‘ சித்திரப்பாலாவி’ என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் வேரை மலபந்தம், நமைச்சல், சிரங்கு முதலியவைகளுக்கும், இதன் பாலை நகச் சுற்றுக்கும், வெட்டைச்சூட்டிற்கும், உபயோகிப்பதுண்டு. இலையையும், விதையையும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சிகளைப் போக்க உபயோகிப்பதுண்டு.
b. Raw-rice plant - Euphorbia Indica alias Ethymnifolia. It is a low spreading plant with its branches pressing flat on the earth. It yields milk when broken and its greenish seeds are close and numerous. It is usually found grown in dry waste lands, dung hills, gardens, grazing lands and on the sides of drains. Its root is useful in constipation and itching. Its milk is useful in whitlow and in subsiding venereal heat. Its leaves and seeds are given in cases of worm and of bowel affections of children. It is an annual plant and is so called from its seeds resembling or tasting like raw rice. Its juice is astringent and slightly narcotic and is used in dysentery. The bark purifies the blood, Sometimes leaves are used as famine food. There are 4 varieties of it viz. large, red and small. It is known by different names, is mentioned below.
I. பெரியம்மான் பச்சரிசி, pill beariho spurge, a common weed - Euphorbia pilulifura alias E.birte.
II. சிவப்பம்மான் பச்சரிசி, a red variety - Euphorbia rosea.
III. சின்னம்மான் பச்சரிசி, thyme leaved spurge - Euphorbia thymifolia alias E.macrophylla. This is the commonest sort.