Search Keyword in HERB category
- a. கசகசாச் செடி. இது 2-3 அடி உயரம் வளரும். விதைகள் சிறியவைகளாகவும், வெண்மை நிறமுள்ளனவாகவும், பூக்கள் ஏராளமாகவும், வெண்மையாகவும் இருக்கும். முதிர்ந்து காய்களிலிருந்து தான் கசகசா உண்டாக்கப்படும். அவைகள் வாசனை அற்றவைகளாயும், சிறிது கசப்பாகவும் இருக்கும். அக்காய்களினின்று வந்து உறைந்த பால் தான் அபினி. அபினி செடி முழுமையும் பால் உள்ளது ஆதலின் அதைக் கஷாயமாகக் காய்ச்சிச் சத்து எடுப்பது உண்டு. அது இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிராக்கப்பட்ட செடி.
a. Poppy plant – Papaver somniferum. It is 2-3 ft in height. Its seeds are small and white, and the numerous flowers are generally white. The matured capsules are called poppy heads and they are devoid of odour, but are of a slightly bitter taste. Milky inspissated juices of the plant are opium. All parts of the poppy plant abound in a milky juice which is extracted partially from its decoction. It is naturalised by cultivation in India.