Search Keyword in HERB category
- a. அதிவிடயம் - இது ஓர் கடைச்சரக்கு. இதன் பூண்டு 2.3 அடி உயரம் வளரும். அடித்தண்டு கோணலாயும், தாறுமாறாகவும் அடியில் மிருதுவாயும், மேலே சிறு துளிர்கள் வாய்ந்துமிருக்கும். பூ நீலமாக இருக்கும். வேர் 1.2 அங்குல நீளமுள்ளதாயும் வெளியே கபில நிறமும் வெண்மையும் வாய்ந்து கசப்பாகவுமிருக்கும். வாசனையற்றது. ஒடித்தால் வெளுப்பாகயிருக்கும். மற்றொரு விதம் கருப்பு, நீளம் சிறியது. அது இமயமலைச்சாரலில் மிகுதியாக உண்டு. இதற்கு வட இந்தியாவில் ‘அந்தீஸ்’ என்ற பெயர். இதில் நாட்டு அதிவிடய மென்று ஒருவகையுண்டு அதன் வேர்கள் மிகவும் சிறியவைகளாகவும், பார்வைக்கு மற்றதைப் போலவும், ஆனால் வாய்க்கு விறுவிறுப்பாகவுமிருக்கும். இது தென் தேசத்தல் மிகுதியாய்க் கிடைக்கும். மேற்சொன்ன இரண்டு வகை வேர்களும் கசப்பாகவும், காரமாகவும், விறுவிறுப்பாகவும், உஷ்ணத்தைத் தரத்தக்கவைகளாகவும் இருக்கும். சீரண சக்தியையுங் கொடுக்கும். இவைகளால் தாது சக்தியும் பலவிர்த்தியுமுண்டாகும். இது ஒரு சுரநாசினி. கடைகளில் சாதாரணமாய் வெண்மையான சூரணமாய் இதை விற்பார்கள். இது மிகவும் கசப்பானது, சிறிது காரமும் உண்டு. குற்றமற்ற அதிகமான பூதாது வாய்ந்ததாயுமிருக்கும். இது ‘பீஷ்’ என்னும் பாஷாணத்தை விடக் கொடியதல்ல. இதன் கிழங்குக்குத்தான் அதிவிடயமென்று பெயர். இதற்குப் பலகாரி குணமுண்டு. இதன் சூரணத்தைக் குளிர்க்காய்ச்சல் நின்ற பிறகு பலவீனத்திற்குக் கொடுக்கலாம். இக்கிழங்கினுள் சில துவாரங்களுண்டு, கரும்புள்ளியுடையதாயும் ‘அடீசன்’ என்று ஓர் வித சத்துள்ளதாகவுமிருக்கும். முறைசுரம், விடுசுரம் இவைகளுக்கு இதன் தூளைத் தேனில் கூட்டிக் கொடுக்கலாம்.
b. A bazaar drug called Indian atees – Aconitum heterophyllum. Shrub 2 to 3 ft in length, stem obscurely.