Search Keyword in HERB category
அதிமதுரம்
[ Adhimadhuram]
- a. மிக்கத் தித்திப்பு.
b. Excessive sweetness.
a. சீமை அதிமதுரம்.
b. Honey-creeper – Glycirrhiza triphylla.
a. நாட்டு அதிமதுரம் அல்லது குன்றிவேர், Indian liquorice root – Aburs precatorious. This is usually sold in bazaars as a substitute for the genuine drug if it is not available.
a. ஓர் கடைச்சரக்கு. இதுவொரு கொடியின் வேர். சாதாரணமாக வங்காள தேசம், பாரசீகம், பரூசாரா முதலியவிடங்களிலிருந்து இறக்குமதியாகிறது. இதற்குச் சீமை அதிமதுரமென்று பெயர். இது பெருவிரற் கனத்தில், பார்வைக்குச் சிகப்பு அல்லது சாம்பல் நிறமாயும், ஒடித்தால் மஞ்சள் நிறமாயும் இனிப்பாயுமிருக்கும். இது தான் பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் விற்கப்பட்டு வருகின்றது. நாட்டு அதிமதுரமென்னும் ஓர் வகையுமுண்டு. அதுதான் குன்றிமணி வேர். கடைகளில் இதை மேற் சொன்ன வேருக்குப் பதிலாகக் கொடுப்பார்கள். இது சிறியதாகவும் விரற்பருமனுள்ளதாகவும் ஒடித்தால் வெண்மையாகவும் சிறிது இனிப்பாகவும், வழவழப்புள்ளதாகவும் இருக்கும். முதற் சொன்ன வேரைக் கஷாயமிட்டு இருமல், க்ஷயம், பெரும்பாடு, வெள்ளை முதலிய நோய்களுக்குக் கொடுப்பர். அது மலத்தை இளக்கும். இதன் தூள் பீனசத்திற்கும், சில்லி மூக்கிலிருந்து வரும் இரத்தத்தை நிறுத்தவும் நசியமாகக் கொள்ளப்படும். இதைக் கரியபோளம், நிலாவிரை, நிலவேம்பு முதலிய கசப்புச் சரக்குகளோடு இனிப்பைத் தருவதற்காகச் சேர்ப்பதுண்டு. இதைக் கஷாயமிட்டுப் பனங் கற்கண்டோடு சேர்த்துக் கொடுக்க நீர்ச் சுருக்கு குணமாகும்.
b. A sweet root of liquorice plant or Honey creeper – Glycirrhiza glabra, alias G. triphylla. It is the root of a creeper and is imported from Bengal, Persia, Bussorah and other places, It is called ‘Foreign sweet.