சரகசம்மிதை என்னும் ஆயுள் வேத நூலையியற்றிய ஓர் இருடி. இவர் ஆத்திரே ரிஷியின் ஆறு மாணாக்கர்களுள் ஒருவர். ஆத்தியேர் உலகத்தாருக்குவதும்படி ஆயுள் வேத நூலை இயற்ற வேண்டிக் கைலாசகிரியில் நடந்த வைத்திய சங்கத்தில் அதிக முயற்சியெடுத்துழைத்தவர். ஆத்தியேர் வாக்கின்படி அவரது மாணாக்கர்கள் அறுவரும் தனித்தனியாக வைத்திய நூல்கள் எழுத, அவைகளுள், அக்கினிவேசர் எழுதியது மிகவும் பொருத்தமுள்ள தாகவும் அனுபவத்தை ஒட்டினதாகவும் இருக்கக் கருதி, ரிஷிகளால் அதைச் சிறந்ததாக எடுக்கப்பட்டது. சரகசம்மிதை என்பது அக்கினி வேசரால் எழுதப்பட்டுப் பின்னர் சரகரால் வடமொழியில் திருத்தி வைக்கப்பட்டுள்ள நூல். இது சுமார் கி.மு. 1,000 வருஷத்திற் முந்தியிருக்கலாமென ஊகிக்கப்படும். - A Rishi (saint) who compiled an Ayurvedic science now called Charaka samhita. He is one of the six pupils of Atreya who took prominent part in the Sanitary Commission held in the Himalaya Mountains for purposes of introducing ayurveda into this world. It is said that each of the 5 pupils wrote a treatise on medicine and the Sages selected that of Agnivesa as the most practical. This was subsequently modified by Charaka, under whose name it became known and his book is undoubtedly the most ancient and continues to be the most celebrated medical work in the possession of the Modern Hindus. It is in Sanskrit and it is not definitely known at what period of the world’s history it was written. It is roughly calculated to be at about 1000 B.C.(Em. Med. Mem).