Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அப்பியாச யோகம்
[ Appiyaasayogam]
- a. தியானம், இது மன ஒருமை ஏற்படும்படித் தொடர்ச்சியாகச் செய்யும் சிந்தனை. இதனால் அலையைப் போல் ஓயாது எழும்பும் நினைவுகள் அல்லது சம்ஸ்காரங்களை அடக்கி ஆளுவதற்கு ஓர் ஏதுவுண்டாகும். தியானம் சித்தியானால், இயற்கையாக உள்ள தத்துவங்களைச் செயிக்க ஆத்துமத்துக்குச் சக்தி தானாகவே ஏற்படும். சதா செய்யும் தியானத்தால் உலகத்தை மறக்கவும் ஏதுவாகும். இவ்விதமாக ஒருவாறு செய்து முடிப்பின், அதிசயிக்கத்தக்க சித்திகளெல்லாம் இதை அப்பியாசிக்கும் யோகிக்குக் கைவல்லியமாகும். ஆகவே மனிதரை ஆட்டுவிக்கும் சக்திகெல்லாம் இவன் ஓர் சூத்திரதாரி போலாவது மன்றி, உலகத்திலுள்ள பஞ்சபூதச் செயல்களெல்லாம் இவனது ஆற்றலுக்கு இணங்கி வணங்கும். இதனால் ஆகாயத்திலும் தண்ணீர் மேலும் உலாவலாம். தியானத்தால் தன்னைத் தானறியலாம். அன்றியும் தன்னை அறியும் அறிவைத் தன்னால் அறியலாம். ஆழ்ந்த தியானமே சுழித்தி நிலை. இதனால் பஞ்சசேந்திரியங்களின் செயல்கள் இயக்கமடைந்து மனதின் அலைவு நீங்கி அதனால் தான் கோரிய சித்தி இவனுக்குத் தானாகவே அமையும். ஏகாந்த நிலையில் இருக்கச் செய்தலால் மனது பரிசுத்தமடைந்து உலகப் பற்றற்றுச் சீவன் முக்தி நிலையை அடையச் செய்யும்.
b. Meditation which is practised for a long time for the purification of the mind. It is the extension of concentration. It is one of the means of controlling the rising wares of the mind from thoughts and recollections (samskaras). By the success in meditation, the soul attains all the powers of nature, by continued meditation upon things Divine, the student forgets the world and once he can, does this. He will be able to obtain wonderful powers and become the master of all that masters the ordinary man. The realms of psychic force how down before him and he can walk upon air and water. By meditation, the Yogi beholds the self, the inner intelligence in the self by the self. In deep meditation, all the functions of the sense are inhibited and there comes a dead stop to the outward flow of the mind. It brings out the real nature of the object in view and infuses it into the soul of the meditator. Meditation in solitude for some time will make one live in the world unattached. (Sircar).