Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அட்சய ரசம்
[ Atchayarasam]
- a. கொங்கணவர் வாத காவியம் 3000-ல் சொல்லியுள்ள 10 வகை ரசக் குளிகைகளில் ஒன்று, இது சாரனைக்கு உதவும், இதைப் பதினொரு தடைவ விடு வித்தாக்கால் அட்ட மாசித்தி ஆடலாம். பூரணத்திற் சென்று நிலைக்கலாம், திரும்பலாம். இதன் பெருமை அடியிற் கண்ட செய்யுளினால் விளங்கும்.
“ஓடலாம் அட்சய மாம் ரசத்தைக் கேளு
உத்தமனே பதினொறுக்கால் விடுவித்தாக்கால்
ஆடலாம் அஷ்டமா சித்தியெட்டும்
அணிமாவும் கரிமாவும் வகிமாவோடு
தேடலாம் மகிமாவும் பிராத்தியோடு
சேர்ந்தயெட்டு மாடலாம் செப்பக்கேளு
நீடலாம் பூரணத்திற்கு சென்று புக்கி
நிலைக்கலாம் திரும்பலாம் நீங்கள் கேளே”.
b. One of the 10 kinds of mercurial pills described in Konganavar’s work on Alchemy. It can be animated as per process laid down therein and if this is done eleven times, one can succeed in the performace of 8 kinds of miracles (vide அஷ்டசித்தி) this pill will also enable him to absorb himself into the Absolute and return to his orginal state at pleasure, as explained in the above stanza.