Search Keyword in TOXICOLOGY category
- a. அலரி மரத்தின் நஞ்சுத் தன்மையுள்ள வேர். இது சாதாரணமாகக் கோணலாய் இருக்கும். இதில் ஓர் வகைப் புளிப்பும், விஷமுள்ள மஞ்சட் பசையும், மெழுகும், சர்க்கரையும், பொருந்திருக்கும். இதே மாதிரியான விஷம், பட்டையிலும் பூக்களிலும் உண்டு. இதைக் குட்டம், உடம்பிற்காணும், குரு, கொப்புளம், கட்டி முதலியவைகளுக்கு உபயோகிப்பதுண்டு. இதன் வேர் மிக்க விஷத்தன்மையுள்ளது. நமது நாட்டில் இதை நல்லெண்ணெயிற் கலந்து உட்கொண்டு தற்கொலை புரிந்து கொள்வார்கள். இதைத் தண்ணீரில் அரைத்து ஆண்குறிச் சிலந்திக்குத் தடவலாம்.
b. The poisonous root of the tree called Indian Willow. It is generally crooked and contains tannic acid, a kind of yellow poisonous resin, and also wax and sugar. Similar poison exists in the bark and the flowers. It is used in leprosy, eruptions on the skin, and boils. The root taken internally acts as a poison and it is sometimes taken with gingelly oil to commit suicide. It is also useful as an external application for ulcers or sores on the penis.