பைத்திய சன்னிக்குக் காரணமான வெறிநாய் கடி, மற்றும் உடலில் இரத்தத்தை முறித்து விஷத்தன்மையை யுண்டாக்கும் புலி, கரடி, சிங்கம் முதலிய துஷ்டப் பிராணிகளாலும் விஷப் பாம்புகளாலும் ஏற்பட்ட கடிகள். இவை தீராதவைகளென்றும், சில வேளைகளில் மரணத்தை உண்டாக்கக் கூடியவைகளென்றும், கருதப்படுகின்றன. இது குணப்படும் இது குணப்படாதென்பதைக் கடியினால் உடம்பினுள்ளேறிய விஷத்தின் அளவைக் கருதியும், கடியுண்டவர்களின் உடம்பின் பாகத்தை நன்கு கவனித்துப் பரீக்ஷை செய்து பார்த்தும் சொல்ல வேண்டியிருக்கிறது. குன்மம், மேகம் முதலிய நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், குழந்தைகள், கிழவர், பலவீனர், மெலிந்தோர், கர்ப்பிணிகள் முதலானவர்களுக்கும், விஷக்கடி அதிகப்படுமே ஒழிய அதைத் தீர்க்க முடியாது - Incurable bites of the following animals
i. The bite of a rabid dog developing symptoms of hydrophobia.
ii. The bites of tiger, bear, lion etc resulting in blood poisoning.
iii. The bite of venomous snakes such as, cobra etc.
The possibility of cure can be determined only after considering the amount of venom injected into the body by the bite as well as the nature and the part of the body bitten. Persons suffering from dyspepsia, gonorrhea or other urinary disorders, children, old, debilitated and emaciated persons, and pregnant women, cannot be cured as the poison becomes doubly strong and operative in their cases.