Search Keyword in PHARMACOLOGY category
அட்டைப் பிரயோகம்
[ Attaippirayogam]
- a. உடம்பிலிரத்தங் கெட்டுப் போயிருந்தாலும் அல்லது இரத்தங் கட்டிக் கொண்டிருந்தாலும் அவ்விடத்திலுள்ள கெட்ட இரத்தத்தை நீக்கும்படிச் செய்ய அட்டையை உடம்பின் மேற் பாய்ச்சுவது.
அப்படி விடுவதனாலட்டை இரத்தத்தை உறிஞ்சி விட்டுப் பிறகு கீழே விழும். அது தானாக விழுவதற்கு முன்னமே அதை விழச் செய்ய வேண்டுமானால், உப்புத் தூள், சாம்பற்பொடி, அல்லது வெங்காய ரசம் இவைகளைப் பிரயோகிக்கலாம். உடம்பிலிரத்தவொழுக்கை நிறுத்த வேண்டினால் மூக்குப் பொடி, படிக்காரம், சாம்பற்றூள் முதலியவைகளைக் கடி வயிற்றூவ நின்றுவிடும்.
b. Leeches are appled to the body of patients having impure or congested blood in their system. They will fall down of their own accord after drawing sufficient quantity of blood. If they are to be removed before that time, powdered salt, or ash or the juice or onion should be applied at the affected part and then it would fall of.