Search Keyword in PHARMACOLOGY category
அங்கக்கிரியை
[ Angakkiriyai]
- a. உடம்பினில் உள்ள உறுப்புகளின் தொழில்.
b. Functions pertaining to an organ in the body.
a. உடம்பையடுத்த தொழில்.
b. (In Physiology) physical functions as opposed to mental ones.
a. உடம்பிற்கு எண்ணெய் பூசல்.
b. Anointing the body.
a. உடம்பில் கஞ்சி அல்லது தைலம் ஊற்றிக் கைகளால் அழுத்தியும், கால்களால் மிதித்தும், துவட்டியும், வாதத்தால் ஈடுபட்ட நோயாளிக்குச் செய்யும் பலவித சிகிச்சை; இதை மலையாளத்தில் ‘நெளரக்கிழி’, ’உழிச்சல்’, ‘தாரை’, எனச் சொல்வதுண்டு.
b. (In Medicine), An Ayurvedic treatment adopted in Malabar in which the whole body is anointed with mediciated conjee or oil and massaged or otherwise pressed by foot. It is a variety of mechanic massage consisting in a systematic therapeutic friction stroking and kneading of the body.
This treatment is generally resorted to, in cases of nervous affections or other similar aliments in order to effect a cure or to bring relief at least to the patient.
a. உடம்பினில் கத்தியால் அறுத்துச் செய்யுந் தொழில்.
b. (In Surgery) any act performed with instruments on the body.
a. வாயினாலும், பார்வையினாலும் மனோவல்லமையினாலும் உடம்பினில் செய்யும் ஓர் விதத் தொழில்.
b. (In Psychology) A Psychic healing performed on the body of the patient by making passes before the eyes or by gazing or by sending vital force to the affected party by Will-power.
NOTE:- It consists of three kinds viz – Pranic healing, Mental healing and Spiritual healing.
a. அடயோகத்தில் செய்யும் உடம்பையடுத்த பலவிதத் தொழில்கள்.
b. The physical exercise done in the course of the practice of Hatha yoga.