Search Keyword in MEDICINE category
அன்ன பேதிச் செந்தூரம்
[ Annabethisenthooram]
- a. அன்னபேதி (அன்ன + பேதி) -.
b. அன்னத்தைப் பேதிப்பது. இது ஓர் கடைச் சரக்கு, 64 பாஷாணங்களிலொன்று, கடைகளில் இரண்டு மாதிரிச் சரக்குகள் (கருப்பு, வெண்மை) விற்கப்படும். மருந்திற்கு உபயோகிக்கும் அன்ன பேதி பச்சை நிறமாகவும், பளிங்குக்கல் போலுமிருக்கும். இது மிகவும் பூர்வீகச் சரக்கு. தற்காலம் ஆங்கிலேய வைத்தியராலும், நாட்டு வைத்தியராலும் மருந்திற்காக வேண்டிக் கையாளப்பட்டு வருகிறது.
இது துவர்ப்பாயும் அத்துடன் சிறிது தித்திப்பாயும், தண்ணீரிற் கரையுந்தன்மை வாய்ந்ததாயுமிருக்கும். இது சாதாரணமாய்க் கந்தகத் திரவாகத்தோடு சேருவதனாலுண்டாகும் ஓர் வைப்புச் சரக்கு. தமிழ் வைத்தியத்தில் இதற்கு அனேக வைப்பு முறைகள் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வெளியூரிலிருந்து இறக்குமதியாகிறது. இதைச் சுத்தி செய்தால் தான் மருந்துகளுக்கு உபயோகிக்கலாம்.