Search Keyword in MEDICINE category
- a. (அனு = கூட அல்லது உடன், தொடர்ச்சி அல்லது பின் + பானம் + குடித்த அல்லது புசித்தல்) அதாவது மருந்து சாப்பிடும் போது, பருகும் வஸ்துக்களை அடியிற் கண்டபடி ஐந்து விதமாகக் கொள்ளுவதால் அதற்கு ‘அனுபானம்’ எனக்காரணப் பெயரிடப்பட்டது.
b. (The term literally means, with, along with or after + drink or take); that which is drunk with, or taken along or taken after medicine in any of the following ways and hence its name vehicle.
1. (அனு = உடன் + பானம் = குடித்தல்) கொள்ளப்படும் மருந்தை உட் செலுத்துவதற்காக வேண்டி அதனுடன் கலந்து உட்கொள்ளும் கஷாயம் முதலிய குடிநீர், any decoction, syrup or other liquid administered with the medicine.
2. (அலு = தொடர்ச்சி + பானம் = குடித்தல்) அருவருப்பைத் தரக் கூடிய மருந்தை உட்புகுத்தற்கு வேண்டி, அம்மருந்தை வாயிலிட்டுத் தொடர்ச்சியாகவே குடிக்கும் குடிநீர், any liquid which is taken in continuation of strong or unpalatable medicines to help their swallowing without difficulty.
3. (அணு = பின் + பானம் = குடித்தல்) மருந்தை விழுங்கிய பின் மீண்டும் அது வெளியே வராமல் இருக்கும்படிக் குடிக்கும் இதமான குடிநீர், any pleasant drink sweet to the taste taken after swallowing the medicine so as to prevent nausea.
4. (அனு = கூட + பானம் = புசித்தல்) சாப்பிட வேண்டிய மருந்தைப் பொதிந்தோ அல்லது வேறு விதமாக உருசி உண்டாகும்படிக் கலந்தோ, எளிதில் உட்செலுத்த வேண்டி உட்கொள்ளும் நோய், தேன், சர்க்கரை, வெல்லம், வெண்ணெய், முதலிய பண்டங்கள், any liquid or semi-solid substance such as ghee, honey, sugar, jaggery, butter etc. with which the medicine in question is covered up or otherwise concealed in or macerated with in a manner pleasing with in a manner pleasing to the taste for facilitating deglutition without feeling aversion or any sort of hindrance.
5. (அனு = பின் + பானம் = குடித்தல்) உணவு உண்டபின் சாப்பிடும் கஷாயம், சர்பத், அரிஷ்டம், ஆசவ முதலிய குடிநீர், a decoction or any sweet drink such as syrup, tincture etc. which is found beneficial when taken after meals – After drink or after-potion.
ஆகவே மேற்கண்ட முறைகள் ஐந்தும் அருவருப்பை உண்டாக்கும் மருந்துகளை ஒக்களிக்காது எளிதில் உட்செலுத்த வேண்டிய தந்திரத்தை நிமித்தமாகக் கொண்டு சொன்னதே ஒழிய மருந்திற்கும் அனுபானத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் சித்த வைத்தியமாகிய தமிழ் வைத்தியத்திலோ, இவ்விதமாக அர்த்தங் கொள்ளப் பொருந்தாது. ஏனெனில் மருந்திற்கும் அத்துடன் கொள்ளப்படும் அனுமானத்திற்கும் ஏற்றப்படிச் சம்பந்த முண்டு. ஆகவே, சாதாரணமாகப் பற்பம், செந்தூரம், சுண்ணம் முதலியவைகளைக் கொள்ளுமுன், மேற்கண்ட நெய், தேன், முதலியவைகளையும், கஷாயம், சூரணம், இலேகியம், பலவாறான மூலிகைச்சாறு, முதலிய வஸ்துக்களையும், அனுபான முறையின்படி இன்ன வியாதிக்கு இன்ன மருந்தோடு இன்ன அனுபானந்தான் கொள்ள வேண்டும் என்று வரையறுத்த வண்ணம் கொடுக்க வேண்டி நேரிடும். ஆகவே ஒரே மருந்தைப் பலவித அனுபானங்களோடு பற்பல நோய்களுக்குக் கொடுக்கப்படும்.
அனுபானத்தின் இரகசியம் தெரிந்து கொள்ளாவிடில் எவ்வளவு சிறந்த மருந்தாயினும் பயன்படாது என்பதைத் திண்ணமாக அறிய வேண்டும். அதில் பிசகு ஏற்படில் நோய்களை கண்டிக்காது. அதுவுமின்றி முறைப் பிசகினால் ஏனைய துன்பங்களும் வந்து சேரும்.
ஆகையினால், அனுபான மென்பது மருந்தை விடச் சிறந்ததாகக் கருதப்படும்.
இவ்வித அனுபான முறை தெரியாத காரணத்தினால் தான் தற்கால தமிழ் வைத்தியர்கள் தங்கள் தொழிலில் சித்தியடைவதில்லை என்பதை இவ்விடத்தில் வற்புறுத்தி எடுத்துக் காண்பிக்க நேரிட்டது.
ஆனால் மற்ற வைத்திய முறைகளில் அனுபானத்தைப் பற்றி மேற்சொன்ன விஷயங்கள் எத்தகைய வேனும் பொருந்தா. ஏனெனில் அவ்விதமான அனுபான முறையைத் தழுவி வைத்தியம் செய்து வருவதாகவோ அல்லது மேற்கண்ட விஷயங்கள் அவ்வைத்திய நூற்களில் இருப்பதாகவோ தெரியவில்லை.
ஆனால் வடதேசத்துச் சித்தர்களாகிய நாகார்ச்சுனரும் வாக்படாச்சாரியரும் சித்த நூலிற் கண்ட விஷயங்களை வடமொழியில் விளக்கி எழுதிய நூற்களில் இவ்வனுபானத்தைப் பற்றி ஒருவாறாகச் சித்த நூற் கொள்கையை அனுசரித்தே எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
These methods are enumerated so as to employ the required medium or vehicle only with a view to administer strong and unpalatable medicines without any difficulty, but not for any other medicinal purpose.
So, these vehicles do not appear to bear any significant relation to the principle medicines.
But in Siddha or Tamil system of medicine, such methods of adoption do not apply for the simple reason that vehicle plays an important role in administering medicines as there exists a close affinity between the one and the other.
The vehicle and the medicine taken together cannot be construed as a mere mechanical mixture but on the contrary a true chemical compound in which the vehicle employed goes to modify the quality or the active principle of the medicine itself, thus rendering the potency and the curative power consistent with the nature of the disease for which it is a administered.
So, on this principle, a medicine prepared or intended to be used for a particular disease can be used with equal advantage for different disease according to the different vehicle (media) employed as per rules of prescription contemplated in the Siddhar’s works.
Therefore, it cannot be regarded only as a medium in which strong and unpalatable medicines are administered, as is done in the practice of other systems of Medicines.
In Tamil medicine, Bhaspams, Sindurams and Sunnams are employed only in this way, as for example, a copper Bhaspam intended for leprosy, syphilis, and other cutaneous affections can be employed with same success for curing diabetes, asthuma, nervous affection, dropsy etc, if only given in proper vehicles. So, a close study of the different vehicles for different disease with reference to a particular medicine is very essential for practice in Tamil Medicine.
Without a knowledge of the secrets of different vehicles, success in the treatment of disease is considered impossible, however great the potency and the curative power of the medicine employed for the purpose may be. On the other hand, great many complications are likely to ensure by the adoption of such irregular and unauthorized methods.
Sometimes, vehicles are considered more important and more efficacious than the medicine itself. So, a conclusion can be safely arrived at that the present-day failure in the practice of Tamil medicine is chiefly due to a want of knowledge in the selection and application of the proper vehicles.
It is very much doubted if such rules on vehicles are in vogue in any other system of medicine for the reason that there does not seem to be any such methods dealt with even in the books of those systems of medicine. Annotator’s of Ayurveda such as Nagarjuna and Vakpatachary of the Siddhar’s School, who translated in Sanscrit, the ‘Siddhar’s knowledge of Medicine’ have explained in their treatises, about this explained in their treatises, about this term (அனுபானம்) to a certain extent as mentioned in the note below.
NOTE:.