Search Keyword in MEDICINE category
அக்கரகார கஷாயம்
[ Akkaragaarakashayam]
- a. அக்கரகார வேரினின்று இறங்கிய ஓர் வகைக் கொப்புளிக்கு நீர், இது பல் வலித்தால் கொப்புளிக்க உதவும்.
b. (In English medicine) a decoction prepared from the pellitory root. Tincture of Pellitory – Tinctura Pyrethri. It is used as a local application for tooth ache.
a. தமிழ் வைத்தியர்களால் இவ்வேருடன் சித்தரத்தையையும் இஞ்சியையும் சேர்த்துக் குடி நீராக விறக்கிச் சன்னிபாத சுரம், பாரிச வாயு முதலிய வியாதிகளினால் சோர்வடைந்த நோயாளிகளுக்கு உத்தீபன மருந்தாகக் கொடுக்கப்படும் ஓர் வகைக் குடிநீர்.
b. (In Tamil medicine) an infusion of this drug with Lesser galangal and ginger is prescribed by the Tamil physicians as a cordial and stimulant in lethargic state of Typhus fever and paralytic affections.