Search Keyword in JEEVAM category
- a. இது நிலத்திலும் நீரிலும் வாழும், புழுப்போன்ற ஓர் வகை நீண்ட பிராணி. இது தன் உடம்பை வேண்டும்போது தன்னிச்சைப்படி நீட்டவும் குறுக்கவும் சக்தி வாய்ந்தது. இதற்கனேக கால்களுண்டு. நிறம் சிகப்பு, பச்சை, கருப்பு, மஞ்சள், சில புள்ளிகளும் வரிகளுமுடையதாக விருக்கும். இதை நமது நாட்டின் கிராமங்களில் மர மட்டைகளிலும், கூரை வீடுகளிலும் மழை காலத்தில் மிகுதியாய்க் காணலாம். இது ஏரி, குளம், ஓடை, வாய்க்கால், ஆறு முதலிய சதுப்பு நிலங்களி லுண்டாகும். இது உடம்பிற்பட்டா லொட்டிக் கொல்லுந் தன்மை உடையது. ஆனது பற்றியே இதற்கிப் பெயர் வாய்ந்தது. ஆப்பிரிக்கா தேசத்திற் சில பாகங்களிலுள்ள அட்டைகள் ஒன்று அல்லது இரண்டடி நீள முள்ளவைகளாயும் மனிதர்கள் தூங்கும் போது அவர்கள் மீது ஒட்டிக் கொண்டு உடம்பிலினிலிருக்கு மிரத்த முழுவதையு முறிஞ்சி உயிரைப் போக்கக் கூடுமெனவும் கூறப்பட்டுள்ளது. இக்காரணம் பற்றியே ஒவ்வொரு மருத்துவச் சாலையிலும் நோயாளிக்கு உடம்பினின்று கெட்ட இரத்தத்தை யெடுக்க வேண்டியதற்கு அட்டைகளை வைத்து வளர்ப்பதுண்டு. இதில் பல மாதிரிகளுண்டு, ஆனால் பாசி நீரி லுற்பத்தியாகிறது தான் சிகிச்சைக் கேற்றவைகலெனத் தேர்ந்தெடுக்கபடுவது. இது சிறிது பச்சை நிறமும் முதுகிற் 6 சிவப்பு வரிகளுள்ளதாயும் இருக்கும். ஆயுள்வேத நூலின் படி இது 12 வகைத் தாயினும் வைத்தியத்திற்கு 6 வகை மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டவை. மற்ற 6-ம் விஷ தன்மை வாய்ந்தவைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. பிரயோகத்திற்கு வேண்டிய ஆறுவகை அட்டைகளாவன:-
கபிலம், பிங்கலை, சங்குமுகி, மூஷிகம், புண்டரீகமுகி, சபரிகம்.
b. It is a long worm-like creature found both on land and in water. It is endowed with powers of contraction and expansion at will and has many feet. There are leeches of different colours such as red, green, black, yellow, brown etc; some have dots on the body and some stripes. In our country, it is found is abundance especially during the monsoon seasons in villages among trees, shrubs, thatches of huts, tanks, stagnant pools, ditches, canals and marshy soils. It sticks to one’s body when it happens to come in contact with him and tries to such his blood. In some parts of Africa, these leeches about 1-2 feet long will be found sticking to the body of men done to death by them while they were asleep, by sucking their blood. They are a source of danger to travellers in forests. They are used in Hospitals to draw out the impure blood from patients to effect a cure. Although it consists of several varieties, the one which originates from the moss in water, is selected to be used on patients for drawing out blood. It is the aquatic blood-sucking worm of the order of Hirudinae. The officinal or green leech-Sanguisuga medicinalis, is of a blackish-green colour with reddish-brown longitudinal streaks on the back. Ayurvedic science deals only with 12 kinds, of which 6 are feet for use and the remaining 6 are considered poisonous.
The six that are fit for use and enumerated in the Shastras, are;
i. Capilah or tawny leech.
ii. Pingalah or one of pale red tinge.
iii. Chunk mookhy or one with a yellow long sharp head.
iv. Poondarika mookhi, that which is brown in colour and with mouth like the flower nelumbu.
v. Sabarikah, that which resembles the leaf of the lotus flower in colour.
Note: the other species of leeches common in South India are:
i. The English or speckled leech. It has 6 stripes spotted with black, and a helly greenish yellow and spotted.
ii. The Peculiar madras leech is a bdellium found in stagnant ponds and ditches. It is larger that the European leech and very voracious. These are used by Vaidynas and Hekeems in the same way as is done by Europeans.
iii. The large Horse leech has depressed body and a dusky coloured back, with the belly yellowish green.
iv. The Ceylon leech about an inch long with point so sharp as to make its way through small openings is dangerous to pedestrians in certain seasons. It attacks the feet, the legs and the thighs.