Search Keyword in TAMIL WORD category
- a. மகமதியர் உபயோகிக்கும் ஓர் வாசனை எண்ணெய்க்கூட்டு. இவ்வெண்ணெய் பூஞ்செடிகளிலிருந்தும் வாசனைத் திரவியங்களிலிருந்தும் சத்தெடுத்துப் பிறகு ஒருங்கே கலந்து செய்யப்படும் சரக்கு. மிகுந்த வாசனை வீசுவதற்குக் கொஞ்சம் துளிகள் போதும். விசேஷ காலங்களில் இதைப் பஞ்சில் துவைத்தோ அல்லது தண்ணீரில் கலந்தோ உபயோகிப்பார்கள். இவைகளில் ரோஜா அத்தர் தான் மிகச் சிறந்தது. ஆனால் இத்துடன் சாதாரணமாய் விலாமிச்சை வேர்த் தைலத்தைக் கலப்பதுண்டு.
b. This is a perfume used by Muhamadans. It is a mixture of several essences extracted from several plants and substances. A few drops are sufficient to produce an intensely strong perfume. On ceremonial occasions these are offered to the guests on a piece of cotton or mixed with water. The best-known attar is the essential oil extracted from the petals of roses, but it is generally adulterated with the volatile oil of the grass (Andropogon schoenanthes) called also lemon oil.