Search Keyword in RAW DRUG category
- a. ஏழு விதக் கடுக்காய்களில் ஒன்று. இது கருப்பு வர்ணமாயிருக்கும். இது சிறந்தது. அபூர்வமாய் மலைகளின் உச்சியில் கிடைக்கும். இதைப் பொடி செய்து அமுரியில் கலந்து 40 நாள் இருவேளை கொள்ள, மும்மலக் களிம்பும் போம். நாடி எல்லாம் முறுக்கேறும். அநேக நாள் உடம்பை நிலைப்பெறச் செய்யும். மிகப் புத்தி விர்த்தியை உண்டாக்கும்.சகல பூதப்பிரதே சங்கைகளையும் தீர்க்கும்.எலும்பைப் பற்றிய நோய்களைப் போக்கும். இது பொதிகை மலையில் உற்பத்தியாகும்.
“அபயனுங் கடுக்கா யங்க நோ யெல்லாம்
அபயமிட் டோட வடிக்கும் – அபையற்
கதிக நிறங் கறுப்ப தாகும் வினை பூமி
பொதிகை மலையாம் புகல்”
(பதார்த்த குண சிந்தாமணி).
b. One of the seven kinds of the Indian gall-nuts. It is black in colour and is found on the tops of hills and that too rarely. A powder of this mixed with purified urine and taken twice a day for forty days is said to cure all defects in the body and strengthen the nervous system. It promotes longevity and increases the power of intellect. It is also said to eliminate all complaints or disorders arising from the morbid fears due to evil influences of demons. It is of great use in the affections of bones. The above stanza goes to show that this drug is available in Pothigai hills in the Tirunelveli District.