Search Keyword in RAW DRUG category
- a. கசகசாப் பால், இது கசகசாச் செடியின் முதிராத காயைப் கீறி அதினின்று வந்து உறைந்த பால், இந்தியாவில் உற்பத்தியாகும் அபினி இரண்டு வகைப்படும். 1. மால்வா அபினி அல்லது பால் அபினி. 2. பாடலிபுரத்தபினி, மாளவ தேசத்து அபினியைப் போல், ஊதா நிறமாயில்லாமல் படலிபுரத்து அபினி மிருதுவாயும், சிறிது கசப்பாயும், புகை வாசனையுள்ளதாகவும் இருக்கும். இது நமது தேசத்திற்குப் பூர்வத்தில் அரேபியர்களால் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகிறது. அபினியின் சத்தை ஆங்கிலேயர்கள் மார்பைன் என்று சொல்லுவார்கள். உயர்தரமான அபினியில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதம் மார்பைன் என்னும் போதை வஸ்து அடங்கியுள்ளது. இதைச் சீனத்தார்கள் விஷேசமாய் உபயோகிக்கிறார்கள்.இம்மருந்து சாதாரணமாய்ப் போதையை உண்டாக்குவதற்க்காகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இதை வழக்கமாகச் சாப்பிட்டால் வயிறு சுருங்குமெனக் கருதப்படும். இதை வைத்தியத்தில் பலவிதமாக உபயோகப்படுத்துவதுண்டு. சிறிய அளவில் உத்தீபன மருந்தாகவும், மயக்கத்தை உண்டாக்கவும், நோய்களை ஆற்றுவதற்கும், உபயோகப்படும். கருப்பையிலிருந்து வரும் இரத்தப் பெருக்கை இது அதிகப்படுத்தும். சிறிது அதிகமாகக் கொடுக்க, மேற்கண்ட பெருக்கை முற்றிலும் நிறுத்தும். அன்றியும், இதைத் தூக்கத்தை உண்டுபண்ணுவதற்கும், தாளையிருத்தும் காய்ச்சலுக்கும் சன்னி, வலிப்பு இவைகளைச் சாந்தப்படுத்தவும், சீதபேதிக்கும், கொடுப்பதுண்டு. இதற்குச் சுரப்பு நீர்களை வற்றச் செய்யும் குணமுண்டு. ஆகவே இதைப் பேதி, வாந்தி பேதி, வயிற்று வலி, அதி மூத்திரம், மது மூத்திரம், காது வலி, நீரடைப்பு, நீரேரிச்சல், பல்வலி முதலியவைகளுக்கும் கொடுப்பதுண்டு. வாத நோய்களிலும் இதைச் சாராயத்தில் கலந்து பூச்சு மருந்தாகவும் உபயோகிப்பது உண்டு. நமது நாட்டு வைத்தியர்கள் இதைப் பூரணாதி முதலிய லேகியங்களில் தாராளமாய் உபயோகிப்பார்கள். குறைந்த அளவில் இதை மனக் கிளர்ச்சிக்கும், நாடி நடைக்கும் கொடுப்பதுண்டு.புளித்த தயிர், சுண்ணாம்பு நீர், முதலான வஸ்துக்கள் இதற்கு மாறாகக் கொள்ளப்படும்.நோயின் வலியைச் சாந்தப்படுத்தும் குணத்திலும், உடம்பை இளைக்கச் செய்யும் நோய்களிலும், இது மிகச் சிறந்த மருந்தெனக் கொள்ளப்படும். இது ஆயுளை நீடிக்கச் செய்வதிலும், உடம்பை வலுவடையச் செய்வதிலும், மிக்க மேன்மை வாய்ந்ததெனச் சிலாக்கியமாகச் சொல்லுவார்கள்.இது உடற் கூற்றின் மாறுபாட்டை மறுத்துக் கிழத்தனத்தைத் தடுப்பதில் சிறந்த மருந்தென நம்பப்படுகிறது. மிக்க அளவில் இது கொடிய நஞ்சுத்தன்மையது. மரணத்தை உண்டாக்கும்.
b. The milky sap of poppy seed Affium. It is the concrete inspissated juice of the plant obtained by scratching immature poppy capsules and not the foliage. The opium obtained in our country (India) consists of two varieties. The first variety is known as Malwa opium. The second variety is called the milk opium or the Dhooth opium which is very soft, bitter and darker in colour. The use of the drug opium is considered to have been introduced into India by the Arabs. The active principle in opium is known in English as Morphine. The best opium contains eight to nine percent of morphine. It is commonly used in China.It is generally used as an intoxicating drug and it is believed that it contracts the walls of the stomach if taken as an addicted drug. It is used in medicine in various ways. In small doses it is a stimulate, narcotic and antispasmodic and it increases bleeding from the womb, but given a little in excess, arrests the haemorrhage completely. Moreover, it is prescribed to induce sleep, to shorten cold fit of and intermittent fever, in lock-jaw, dysentery and other bowel-affections. It is commonly believed to be a prophylactic agent and as such as used in cases of diarrhoea, cholera, colic, diabetes insipidus, diabetes mellitus, ear-ache, stricture of urine, tooth ache etc. As external applications, when mixed with arrack, it is valuable in various rheumatic and neuralgic affections. Vaidyans in India use opium freely in medicine and especially in the preparation of electuries such as, pooranathi etc. In small doses, it increases the energy of the mind and the frequency of the pulse. Acetic acid being a perfect counter poison for opium, substances such as curd, lime water etc is freely used as antidotes, as also permanganate of potassium. The belief in its use in the mitigation of suffering and in painful and wasting diseases is but universal. Great virtue is attributed to it as it tends to promote longevity and much of the invigoration produced by it, is mainly artificial. It is believed to have the desired effect in old age of arresting or retarding the molecular changes. The other kinds derive their names from the places where they are grown, as given under.
1. Turkey or Smyrna.
2. East India or Bengal.
3. Egypt.
4. Europe.