Search Keyword in RAW DRUG category
அத்திப் பால்
[ Aththippaal]
- a. மரத்தினடியில் குத்தியெடுக்கும் பால். இது மிகவும் துவர்ப்புள்ளதாகையால், இரத்த பேதி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, நீரழிவு முதலியவைகளைக் குணப்படுத்தும். இத்துடன் பாலும், சர்க்கரையும் கலந்து கொடுக்கச் சீதபேதி தீரும். இப்பாலைப் பிரமேகம் முதலியவைகளால் ஏற்பட்ட இரணங்களுக்குப் பீச்சுவதனால் குணம் ஏற்படும், அன்றியும் இது மூலம், பெரும்பாடு, இரத்தமூத்திரம் முதலியவைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்கவும், வாத ரோகங்களுக்கு மேலுக்குப் பூசவும் உதவும். ஆனால் சீமையத்திப் பட்டையினின்று ஒழுகும் பால் உடம்பில் பட்டால் சிவந்து புண்ணாகும்.
b. The milky juice of the country fig.