Search Keyword in RAW DRUG category
அக்கரகார வேர்
[ Akkarakaaravaer]
- a. அக்கரகார மரத்தின் வேர், (மருந்து வேர்). இது முக்கியமாய் வட ஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து பம்பாய் வழியாகக் கொண்டு வரப்படும். எல்லா கடைகளிலும் காணலாம். இது துண்டு துண்டாகவும் மேற்புறம் மங்கல் நிறமாகவும் உள்ளே வெண்மையாகவும் இருக்கும். இதை மெல்லுவதனால் வாய்க்கு அழற்சியையும், நாக்கிலும் உதட்டிலும் விரு விருப்பையுங் கொடுக்கும். பல் வலிக்கு மெல்லுவதுண்டு. இதைக் கஷாயமிட்டுக் குடிக்க வாத நோய் குணப்படும்.
b. The root (medicinal) of a plant – Anacyclus pyrethrum, Pellitory root-Pyrethri radix. It is imported from North Africa via Arabia and Bombay and is available in almost all the bazaars. It will be seen in pieces about the size of the little finger and is externally brown and internally white. When chewed, the pungency of the root is felt by a glowing heat in the mouth and pricking sensation on the lips and the tongue. It is used as masticatory in tooth-ache. An infusion of this drug is useful in case of rheumatism.
NOTE: It has an acrid resinous principle pyrethrin.
The powder of the root is used in the Unani system of treatment of patients to excite transpiration by being rubbed on the skin. It is also used as an ingredient in snuff. See also அக்கிரகாரம்.