உயிர் தரு மருந்தைப் போன்ற சத்துக்கள் அமைந்த நீரானது கசியப் பெற்ற சிறிய கோளம், இவைகள் உடம்பில் உருண்டைகளாகச் சிறிய மாமிச மொத்தைகள் போலப் பல இடங்களில் காணப்படும். சித்த நூற்படி இவைகளுக்கு ‘அமுத நிலைகள்’ என்று பெயர். இக்கோளங்களினின்று ஊறும் அமுதத்தைப் போன்ற சத்து உடம்பைப் போஷிப்பதற்கு ஓர் இன்றியமையாத வஸ்துவாய் இருப்பது மல்லாமல், போதுவாக மனிதர் உயிர் வாழ்க்கைக்கும் பிரதானமாயுள்ளது. யோகாப்பியசத்தில் கோளங்களின் தொழில்கள் அதீதமடைந்து, அவைகளினின்று கசியும் நீர்ச் சத்தாகிய அமிர்தம் உடம்பினுள் ஊறி நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு முதலியவைகளை முற்றிலுமே தடுத்து உயிரையும், உடம்பையும் நிலை பெறச் செய்யும். சித்தர்கள் இவ்விஷயங்களைப் பரிபாஷையாகத் தங்கள் நூற்களில், பல சந்தர்ப்பங்களிலும், குறிப்பாகக் காட்டியுள்ளனர். ஆகவே, இதனால் தான் யோகிகளும், சித்தர்களும் அனேக காலம் உயிர் நிலைத்திருப்பார்கள் - In Siddha Philosophy, an organ which is said to secrete some vital fluid like ambrosia. It is a small roundish mass or organ found in many parts of the body. In Siddhas’ language, it is known as ambrosial glands. The secretions from these glands are considered not only essential to the growth of the system, but also to the human existence as a whole. The activities of these glands is stimulated to a great extent by concentration in the yoga practice with the result that the fluid secreted therefrom enables the subject to overcome greyness, wrinkles of the skin or relaxation of the muscles, old age, infirmity, diseases and lastly death, and contributes much to establish longevity, Siddhars have also pointed this out and have even discussed this figuratively in their works in many places. Because of these secretions the yogis and Siddhars attain Siddhis (miraculous powers) and live for a very long time.