Search Keyword in MEDICAL TERMS category
அக்கினி மண்டலம்
[ Akkinimandalam]
- a. மூலாதாரம் முதல் நாபிக் கமலம் வரை.
b. (In physiology the seat of fire in the abdominal region extending from the pelvis / perineum to the naval region. – Gastric region.
a. மூலாதார முதல் சுவாதிஷ்டானம் வரை. இது நாற்சதுரமாய், நடுவே மூன்று கோணமாய், பிருதிவியும் அப்புவுங் கூடின விடத்தேயுள்ளது.(வே.தத்,கட்டளை).
“தொடர்ச்சியாஞ் சுவாதிஷ்டானத்தின் கீழே
சுகமாக நடுமை மக்கினி மண்டலந்தான்
முடர்ச்சியாய் முச்சுடராய் மூலமட்டும் பரவி
முனைந்த சுவாதிட்டான் மட்டு நிற்கும்”
(யூகி.வை.சிந்).
b. (In Psychology) that portion or the region extending from the sacral plexus to the Hypogastric centre.
a. அடி வயிறு.
b. The abdomen.
a. மூன்று மண்டலத் தொன்று.
b. One of the 3 regions of the body.
NOTE: Psychologically, the body is divided into 3 regions, viz. those of the sun, moon and fire (ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம்).