அட்சரம் - அதாவது குழந்தைகளுக்கு வாயினுள் உண்டாகும் சிறு சிறு கொப்புளங்கள். இதில் பல மாதிரியுண்டு - Thrush or more correctly the whitish spots in the mouth of infants – Aphthae. There are different kinds in this.
சாதாரணமாய்ச் சிறு குழந்தைகளுக்குக் கணச் சூட்டினால் வயிறு கோளாறு அடைந்து வாய், நாக்கு, உதடு ஆகிய இவ்விடங்களில் சிறு கொப்புளங்களை எழுப்பும் ஓர் வகை நோய். இது அச்சரம் எனவும் வழங்கும் - A disordered state of the stomach characterized by the appearance of small white ulcers or vesicles in the mouth, and on the lips and the tongue. It chiefly affects small children and is generally associated with febrile affections – Aphthous Stomatitis alias Parasitic Stomatitis.
நாக்கின் அடியில் அட்சரம் பொங்கி அதனால் ஈரல், மண்ணீரல் முதலிய வீங்கி மரணத்தை உண்டாக்கும் நோய் - A fatal disease characterized by aphthous ulceration under the tongue and enlargement of the liver and the spleen – Cachectic aphthae.
உஷ்ணப் பிரதேசங்களில் குழந்தைகளுக்கு மாந்த நோயினால் அழற்சி உண்டாகிப் பொங்கும், அட்சரம் - Aphthous eruptions with digestive disturbances attacking generally children in tropical countries – Tropical aphthae.விஷக் காற்றினால் இரத்தம் முறிந்து அதனால், தாகம், கைகால் உளைச்சல், உடம்பு சில்லிடல் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வகைக் கழிச்சல் - A kind of acute diarrhoea of the nature of cholera produced by the altered condition of blood in the system through infectious causes arising from the floating of poisonous microbes in the air. The symptoms are thirst, cramp in extremities, cold, skin etc., Miasmatic contagious diarrhoea.
மேலிமை தடித்து, வலியுண்டாகிக் கண்ணீர் வடிந்து, பீளை தள்ளும் ஓர் வகைக் கண்ணோய் - An eye-disease characterized by the painful inflammation of the upper eye-lid, with catarrhal and muco-purulent secretion; a kind of Blepharitis – Croupous ophthalmia.