Search Keyword in CHILD category
அக்கர கணரோகம்
[ Akkarakanarogam]
- a. கணச்சூட்டினால் வாய், வயிறு, குடல் முதலிய உறுப்புகள் வெந்து தேகவாட்டம், வாய் நாற்றம், சுரம், மயக்கம், முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வகைக் கண நோய் இது. முக்கியமாய்ச் சிறு குழந்தை முதல் 12 வயது வரையிற் தொடரும்.
b. A kind of wasting disease marked by the presence of diffuse white patches due to inflammation of the mouth, stomach, intestines etc. The usual symptoms are - giddiness, loss of flesh, fetid breath, fever etc. It occurs especially in weak children and young. Ster up to twelve years of age. Ulceration of the alimentary tract.
(Note: கணரோகம் என்பது மாதா பிதாக்களின் நாதவிந்துக்குள் அடங்கிய வாதாதி தோஷங்களினின்றும் உற்பத்தியாகிக் கருப்பாசயத்துச் சிசுவைப் பற்றி அச்சிசுவினது எழுவகைத் தாதுக்களும் வன்மையடையுங் காலத்து விருத்தியடைவதால் இது கணரோகம் எனப் பெயர் பெற்றது. A kind of congenital disease of the child arising from the maturity of bad humours inherited from the parents. It is an atrophy resulting from the enlargement of the bowels and tabes mesenterica. The disease progresses as the child advances in age.).