சினையழிதல், அதாவது சினை கருப்பைக்குள் வந்து சேரா முன்னமே அதனுடைய தன்மை அழிந்து, கருத்திரளாமை - A variety of tubal abortion occurring from the ampulla of the oviduct – Ampullar abortion.
கருப்பையில் உறுப்புகள் திரளாமுன்னம் இளங்கருவாயிருக்கும் போதே கருப்பம் கரைந்து வெளிப்படும் கருப்பம் - The ovum or the foetus which is expelled in the shape of a reddish-white ball. This occurs before the 4th month of pregnancy – Embryonic abortion.
இது சில பெண்களுக்குக் கருப்பமடைந்த முதல் 7 மாதம் வரையிலும் வளர்கின்ற இளங்கருவானது வாதாதி தோஷங்களினாலும், தகாத நடத்தைகளினாலும் ஒருவேளை கரைந்தும், அப்படிக் கரையாமலும் விழும் - An abortion which occurs in women before the 7th month from a constitutional disease or from one brought about in an unnatural way.
சில பெண்களுக்குக் கருப்பம் உண்டாகாமலே கருப்பையில் கட்டுப்பட்ட இரத்தமானது காரசார உஷ்ணமுள்ள வஸ்துக்களினால் கரைந்து விடும். இதைப் பிண்டம் என நினைத்துப் பிசாசு அறைந்ததனால் பிண்டம் கரைந்து விழுந்ததென அறிவீனத்தால் வீண்தூறு செய்வார்கள் - Hemorrahge from the uterus resulting from false pregnancy. It is sometimes confounded with the real one. It is generally believed to be an abortion, the cause of which is attributed to the influence of evil spirits.