உடம்பினில் கீழ் முகமாக நோக்கும் வாதம். இது நாபியிலிருக்கும் சமானவாயு, குதத்திலிருக்கும் அபானவாயுவுடன் கூடிப் பிறகு பித்தத்தை அனுசரித்து மார்பில் எரிச்சலை உண்டாக்கி, அடிவயிற்றிலும், கவுட்டியிலும், கீழ்முகமாக இறங்கிப் பீஜத்தில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். அதனால் ஆண்குறியின் துவாரம் அடைபட்டுச் சுக்கிலம் வெளிவராமலும் மூத்திரம் துளித்துளியாகவும் இறங்குவதுடன், ஆசனவாய் சுருங்கி அதனால் மலபந்தமுண்டாகும். பெண்களுக்குக் காணும் போது அல்குலில் இறங்குவதால் அத்துவாரம் சுருங்கி மேற்படிக் குறிகளைக் காட்டும் - A disease resulting in the descent of Vayu (air) from the abdominal region to the sacral region in consequence of the combination of the Samanan (vital air essential for digestion) and Abanan (vital air essential for excretion) through the lower channel, inguinal canal etc. The descent so caused gives rise to diseases in four different ways as mentioned below.
i. Swelling and pain, entering into the scrotum.
ii. Obstruction to urethra and stricture of urine, entering into the urinary passage.
iii. Contraction of rectum and constipation, entering into the intestines.
iv. In females, brings on the same symptoms as mentioned above in the case of male, entering into the vagina.