பிடுக்குவாதம், அதாவது பிடுக்கில் நீர் இறங்கிப் பருத்துக் காணும் நோய் - A circumscribed 1. collection of fluid in the scrotum – Hydrocele or Scrotal hydrocele.
விதைவாதம் – விதையைச் சூழ்ந்துள்ள தோற்பைக்குள் நீரிறங்கிப் பருந்துக்காணும் ஓர் நோய் - Hydrocele due to collection of fluid in the serous covering of the testis – Funicular hydrocele.
தசையண்டவாதம் – பிடுக்கினுள் சதை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் ஓர் வாதம் - Enlargement of the scrotum due to collection of fluid and morbid growth of the skin – Elephantiasis of the scrotum.
குடலண்டவாதம் – வாத மிகுதியால் பிடுக்கில் குடலிறங்கி மரக்காற்போல் பருத்துக் காணும் ஓர் வாதம் - Swelling of the scrotum from the protrusion of a portion of the intestine through the abdominal opening and its consequent decent into it (scrotum) Hernia.