Search Keyword in GENERAL category
- a. இலிங்க விரணம், இது நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் அல்குலுக்குள்ளிருக்கும் விஷநீர், ஆண் குறியில் பட்டு, இலிங்கத்தின் மேலாவது, மலரை மூடிக் கொண்டிருக்கும் இலிங்க கவசத்தின் மேலாவது புண்ணுண்டாக்கிப் பிறகு உடம்பிலேறி வியாபித்து, மேகச் சொறி, மேகவூறல் முதலிய பலவித சரும நோய்களையும், எலும்பு நோய்களையும் உண்டாக்கும்.
b. A syphilitic sore on the genital (penis). Chancre. It is caused by infection in sexual intercourse with a woman suffering from veneral complaints. In its primary local seat, it is a hard or true chancre, where from it extends through the lymphatics to the skin and to nearly all the tissues of the body, and even to the bones giving rise to various skin eruptions and diseases such as Condyloma, Eczema etc.
Note: (In Sukaidosha) An eruption or abscess formed on the penis due to the injudicious application of sukai on it. It exhibits symptoms which are identical with those manifested in a case of அலசி in பிரமேகம்.
a. ஓர் வகை அற்ப விரணம், இது உடம்பில் வட்ட வடிவாய்த் தடித்தும் உயர்ந்தும் இருக்கின்ற சிறு சிறு கட்டிகளை நெருக்கமாகப் பிறப்பிக்கும், அக்கட்டிகளின் முளையானது உள்ளழுந்தி நடுவில் பள்ளம் விழுந்திருப்பதுடன், அங்கிருந்து கொஞ்சம் சீழும் வடியும்.
b. A simple ulcer covered with fungous granulations projecting above the level of the skin with a depression in the centre and discharging pus – Fungous ulcer.
a. மேக சம்பந்தத்தினால் கருவிழிக்கு வெளியில் வீக்கத்தை உண்டாக்கி அங்கு நோவையும், கடைவிழியில் நமைச்சலையும், இமைகளில் வெடிப்பையும் உண்டாக்கும் ஓர் விதக் கண்ணோய்.
b. An eye-disease with swelling in the cornea, irritation at the edge of the cornea and fissure on the eye-lids due to syphilitic causes - A kind of–Keratitis.