Search Keyword in GENERAL category
அர்த்தித வாதம்
[ Arththithavaatham]
- a. வாதங் கோபித்துத் தலை, முகம் ஆகிய இடங்களில் பரவி, ஒரு பாதியைத் தாக்கி, முகத்தை ஒருபக்கம் திருப்பி, நோவு, குத்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் நோய். இது வெகுநேரம் உரத்துப்பேசுதல், சைத்திய வஸ்துக்களைப் புசித்தல், மிகவும் நகைத்தல், கொட்டாவி விடல், தலை மூட்டை எடுத்தல், மேடு பள்ளமான நிலங்களிற் படுத்தல், ஆகிய காரணங்களினால் உண்டாகும். இது. சாதாணமாகக் கர்ப்பிணிகளையும்,பிரசவித்த பெண்களையும், குழந்தை, கிழவர், பலவீனர் முதலியவர்களையும் தாக்கும். அதவுமன்றி, அளவு கடந்த இரத்தப் போக்கினாலும் அல்லது இரத்த இன்மையினாலும், இது உண்டாகும். இது 3 மாதத்திற் குள்ளானால் சாத்தியம், ஒரு வருஷத்திற்கு மேற்பட்டால் அசாத்தியம்.
b. A nervous disease due to the enraged condition of the local Vayu which spreads and finds lodgment in the regions of the head and the face. It distorts the face on one side. Motor paralysis of one side of the face - Facial, hemiplegia.
It is said to arise from continuous talking in an extremely loud voice, chewing of hard and cold substances, loud laughter, yawning, carrying extremely heavy loads and lying in uneven places etc.
Generally pregnant women, mother after parturition (delivery) infants, old and enfeebled persons etc, are liable to fall victims to this disease.
It is also said to result from excessive haemorrhage or loss of blood. It is curbale if within three months but may become chronic after a year.