Search Keyword in GENERAL category
அபிசார சுரம்
[ Abisaarasuram]
- a. ஆரிய கொள்கைப்படி, மந்திரம், செபம், ஓமம், முதலியவைகளினால் எழும் சுரம், இது அதர்வண வேதத்தில் சொல்லியுள்ள மாரண மந்திரங்களைக் கொண்டொருவன் பேரைச் சொல்லிச் செய்தலினால் பிறருக்கும் எனக் கருதப்படும்.
b. According to the Aryan science, it is a kind of fever ushered in through the dynamic forces of deadly incantions or through the performance of magic, meditation, sacrificial rites etc. It is supposed to be caused by chanting the name of the intended party along with the magic spell contemplated in the Atharvana Veda with a view to strike a mortal below at him.
a. சித்தர் நூல் கொள்கைப்படி, அஷ்ட கருமங்களில் ஒன்றாகிய மாரண மந்திரத்தைக் கிரமப்படிச் செபித்து, அதனால் ஒருவனுக்கு விளைவிக்கும் சுரம், இதனால் உடம்பு முழுமையும் கொப்புளங்கள் தோன்றி, சன்னிபாத சுரத்திற்குக்குரிய குணங்களைக் காட்டும், இது மணி மந்திர மருந்துகளினால் குணப்படும்.
b. According to Siddhars’ Science, it is a fever brought about by chanting one of the eight kinds of magic incantation contemplated in the Mantric science of Siddhars called, “Attakaruma Siddhi”. Psychologically, it is known as ‘Black art’. It is said to develop boils all over the body followed by the symptoms of typhoid fever. It can only be cured by a combined treatment of magic and medicine.