Search Keyword in GENERAL category
அபதந்திரக வாதம்
[ Abathandhiraga vaatham]
- a. வாயுவானது ககித்துத் தன்னிடத்தை விட்டு நழுகிக் கபத்தோடு கலப்பதனால் மேலெழும்பி, மார்பு, தலை, நெற்றி ஆகியவைகளின் நரம்புகளைப் பற்றி, அங்கு வாத நோயையும் உண்டாக்கி, அத்துடன் கை கால் இழுப்பையும் விளைவித்து வளையவும் செய்யும். அன்றியும் இது உடம்பையும் வில்லைப் போல் வளைத்து நெட்டுயிர்ப்பையும், நெஞ்சில் சத்தத்தையும் உண்டாக்கும். மார்பை விட்டுக் கீழிறங்கும்போது, புத்தித் தெளிவையும் அடையச் செய்யும். அப்படி கீறிழங்காவிடில் அசாத்தியமாகும். இது பெண்களுக்குக் கருப்பங் கலைந்த காலத்திலும், மாதாந்தர ருது காலத்திலும் உண்டாகில் மரணம் ஏற்படும். இது மந்த வஸ்துக்களையும், அவபத்தியமான உணவுகளையும் உட்கொள்வதனால் பிறந்து, நரம்புகளில் பரவி, உடம்பின் சில பாகங்களை மரத்தல் அடையச் செய்து. ஞாபக மறதி, பிரமை முதலிய குணங்களையும் உண்டாக்கும்.
b. A nervous disease ascribed to the action of the enraged Vayu, sub charged with the deranged karpam. This Vayu is dislodged from its natural seat or other receptacle in the body and in consequence there of courses upwards and finds lodgement in the regions of the heart, head and the temples. It causes pressure upon those parts and gives rise to pain and convulsive movements of hands and legs or at times even bends them down. The spinal column is also bent like an arch causing a peculiar sound in the larynx. The descent of Vayu in its course helps the patient to regain his consciousness and the normal condition of the body. If the said enraged Vayu is obstinate and does not find its course downwards, it is likely to be complicated and incurable. It is prone to prove fatal in cases of women attacked during abortion or in their menstrual periods. It is generally due to incompatible articles of food and errors in diet and it extends to the nervous system causing thereby, numbness, loss of memory, impaired sensibility etc. c.f. அநுத்தம்ப வாதம். According to English Medicine, it is a neurotic condition characterised by spasmodic and co-ordinate disturbances of a functional origin extending to the nerve – centres of the thoracic region and upwards.