Search Keyword in GENERAL category
அந்தரா யாமம்
[ Andharaayaamam]
- a. அந்தரா யாம வாதம் - இது தனுஸ்தம்ப வாதம் இருவகைகளிலொன்று, இதில் உடம்பின் உட் புறத்து நரம்புகளில் வாதம் சேர்ந்து, அதனால் முதுகும், சிரசும் இழுத்துப் பிடிக்கப் பட்டு, வயிற்றுப் பக்கமாய் வில்லைப்போல் வளைந்து, வியர்வை, கண்நிலை குத்திடல், தாள் பிடிப்பு, விழுங்க முடியாமை, வாயில் கோழை, வாந்தி, சுரம் ஆகிய இக்குணங்கள் உண்டாகும். இந்நோய் மருந்திற்கு வசப்படாது, சில சமயம் அபூர்வமாக வசப்படினும் மிகவும் கஷ்டத்தோடு குணப்படும், தமிழில் இதற்கு முன்னிசிவு என்று பெயர்.
b. One of the two distinct types of a disease in which the enraged Vayu, which is accumulated in the nervous system, bends the body of the patient inwards and forwards like a bow and renders it tense. It is characterised by perspiration, fixation of eyes, paralysis of the jaw – bones which makes deglutition extremely difficult, slimy secretion from the mouth, vomiting, fever etc – Emprosthotonos. The disease rarely yields to medicine and in rare instances only with the greatest difficulty. In Tamil, it is known as Munnisivu which means a curve extended inwardly and forwardly.
a. See also ஆகர்ஷண தம்ப வாதம்.