ஆயுர்வேத மருத்துவக் கூற்றின் படி, பெண்களுக்கு அல்குல் வழியாகவோ அல்லது கருப்பைக்குள்ளிருந்தோ பால் போல் தூய வெண்ணிறமாயோ அல்லது சளி, சீழ் முதலியன போலவோ திரவம் வெளிப்பட்டு, அல்குலிலும் முதுகிலும் நோவை உண்டாக்கி, அடிவயிறு கனத்து, நாளுக்கு நாள் உடம்பு மெலிந்து, கை கால் ஓய்ந்து போகும்படிச் செய்யும் நோய். இது பலவீனம், மனோவியாகூலம், அகாலப் பிரசவம், முரட்டுப் புணர்ச்சி ஆகிய காரணங்களினால் ஏற்படும். இது சிகிச்சைக்கு வசப்படாது - A disease in women characterised by a whitish viscid discharge from the vagina or uterine cavity due to the congestion of these parts. It arises from weakness, perturbation of the mind, abortion or premature labour, rude coitus etc. It is marked by pain in the genital and the back, heaviness in the abdominal region, gradual emaciation and languor. It is called “ whites” and is not easily curable according to Ayurvedha – Leucorrhoea.
ஆயுர்வேத மருத்துவக் கூற்றின் படி எலும்புருக்கி அதாவது எலும்புகளின் நடுவிலிருக்கும் மச்சையை உருக்கிக் கொண்டு சூலையுடன் வெளிப்படும் ஓர் நோய்- A tabes marked by a secretion of the marrow from the bony tissues with a darting pain – Osteotabes. It is not easily curable according to Ayurvedha
சித்த மருத்துவக் கூற்றின் படி இரச தாதுவின் கொதிப்பினால் இரத்தத்தின் இயற்கை நிறம் கெட்டு வெளிப்படும் ஓர் நோய் - A wasting disease arising from the discharge of blood, with its natural colour altered, owing to the overheated condition of the chyle in the system. . It is not easily curable according to Siddhar’s science