அதி = மிகுதி + தாபகம் = தவிக்கச் செய்தல் - உடம்பைத் தவிக்கச் செய்யும் ஓர் வாத நோய். இது உணவின் குற்றத்தினாற் பிறந்து சர்வாங்கத்தையும் அனுசரித்து பேதி, வாந்தி, ஆயாசம், வயிற்றுப்பிசம் முதலிய பலவித வேதனைகளை உண்டுபண்ணி மறத்தல், சுழலல், உதரல், முதலிய குணங்களைக் காட்டி தவிக்கச் செய்யும். மூன்று நாள் வரை அசாத்தியம். பிறகு சாத்தியமாகும் - A kind of nervous prostration arising from errors in diet and extending all over the body. It is attended with purging, vomiting, distension of the abdomen etc and also accompanied by numbness, giddiness, tremor and other distressing symptoms. The seriousness will continue for three days after which the patient may show progress – Gastric neurasthenia.