விஷப்பூச்சியினாலும் அல்லது அசுத்த பண்டம், பாஷாணம் அல்லது விஷத்தன்மை வாய்ந்த பேதிமருந்து முதலியவைகளை உட்கொள்ளுவதினாலும், நோயை உண்டாக்கும் உடம்பின் நிலைமை. இதில் வயிறுபொருமி, வியர்த்து, வாய்பிதற்றி, உடம்பு நடுக்கங்கண்டு, இரத்தம் விழும் - A morbific diathesis followed by diarrhoea due to bacterial action or the irritation of the intestines due to improper food, chemic poisons, drastic purgatives containing narcotic poison etc. It is marked by a rumbling noise of the bowels, perspiration, incoherent speech, tremor, and blood in stools etc – Inflammatory or Irritative diarrhoea.